பிகில் படத்தின் ட்ரைலரில் இதை எல்லாம் கவனித்தீர்களா.. கண்டிப்பா மிஸ் பண்ணி இருப்பீங்க..

0
157104
bigil
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் டிரைலர் இன்று(அக்டொபர் 12) மாலை 6 மணிக்கு வெளியாக இருந்தது. ரசிகர்கள் எதிர்பார்த்ததைப் போல பிகில் படத்தின் டிரைலர் மிகவும் அதிரடியாக இருக்கிறது. மேலும், ஏற்கனவே வந்த தகவலின்படி இந்த படத்தில் நடிகர் விஜய் தந்தை மற்றும் மகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால், இதில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறாரா இல்லை மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று ட்ரைலரை பார்த்த பின்னர் ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அதைத் தவிர இந்த டிரைலரில் நீங்கள் கண்டிராத பல்வேறு விஷயங்களும் இருக்கிறது அதைப்பற்றிய தொகுப்பினை தற்போது பார்க்கலாம்.

-விளம்பரம்-

ட்ரைலரின் ஆரம்பத்தில் இரண்டு விதமான மைதானங்கள் காண்பிக்க படுகிறது. ஒன்று சாதாரண மைதானமாகவும் மற்றொன்று சர்வதேச மைதானம் போன்றும் இருக்கிறது.

- Advertisement -

மேலும், பயிற்சியாளராக இருக்கும் விஜய்யின் அணியில் யோகி பாபு, கதிர் மற்றும் ஆனந்த் ராஜும் இருக்கிறார்.

மேலும், ஆனந்த் ராஜ், அப்பா விஜயுடனும், மகன் விஜயுடன் இருக்கிறார்.

-விளம்பரம்-

ஒரு காட்சியில் விஜய்யின் சீருடையில் தமிழ் நாடு கால்பந்து லோகோவும் மற்றொரு காட்சியில் வேறு ஒரு லோகோவும் இருக்கிறது. ஆனால், ட்ரைலரில் காண்பிக்கப்பட்டுள்ள மைதானம் ஏதோ சர்வதேச மைதானம் போன்று தான் தெரிகிறது. எனவே, விஜய் தமிழ் நாடு சார்பாக போட்டிகளில் விளையாடுகிறாரா இல்லை வெறும் உள்ளூர் போட்டியில் மட்டும் விளையாடுகிறாரா என்பது சந்தேகமாக இருக்கிறது.

இந்த காட்சி மூலம் விஜய் கால்பந்து வீரரான மெஸ்ஸியின் ரசிகராக இருப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது. மேலும், பிகில் கதாபாத்திரத்தில் வரும் விஜய்யும் மெஸ்ஸி போன்று தான் ஹேர் ஸ்டைலை வைத்துள்ளார்.

ட்ரைலரின் இந்த காட்சியில் மட்டும் தான் டேனியல் தோன்றியுள்ளார்.

அதே போல ஒரு காட்சியில் விஜய் ஒரு பழைய பெட்டியை திறக்கிறார். அதில் ஒரு ஷூ இருக்கிறது. அதே போல லுங்கியுடன் வேறு ஒரு காட்சியில் சண்டை போடும் விஜய்யும் அதே ஷூவை அணிந்திருக்கிறார்.

இந்த காட்சியில் மட்டும் தான் அப்பா விஜய் மற்றும் மகன் விஜய் இருவருமே ஒரே பிரேமில் தோன்றியுள்ளனர் .

இந்த காட்சியில் அப்பா விஜய் தமிழ் நாடு ஸ்போர்ட்ஸ் கவுன்சில் உள் மாஸ் வசனத்தை பேசுகிறார். ஒரு வேலை தனது மகனுக்காக அப்பா விஜய் ஸ்போர்ட்ஸ் கௌன்சில் சென்று ஏதாவது பேசி இருப்பார் என்று தோன்றுகிறது.

இந்த கட்சியில் சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்கிறார் விஜய், அடுத்த கட்சியில் அவர் ஓட்டும் பைக்கில் கூட DL என்று டெல்லியின் பதிவு இருக்கிறது. அங்கு தான் வில்லனான ஜாக்கி ஷாரப்பை சந்திக்கிறார் விஜய் என்று எதிர்பார்க்கபடுகிறது.

அதன் பின்னர் தான் ஒரு கூடை பந்து மைத்தனத்தில் சில பைல்வான்கள் விஜய்யுடன் சண்டை போடுகின்றனர் அவர்களை அடித்து துவைத்து கைகளை கட்டி போட்டு ஜாக்கி ஷாராப் முன் நிக்க வைக்கிறார் விஜய்.

சரி, இவ்வளவு பார்த்துவிட்டோம், விஜய் படம் என்றால் அதில் எதாவது சர்ச்சை இருக்கும் அல்லவா, அந்த வகையில் விஜய் பல படங்களில் தான் ஒரு கிரிஸ்துவர் என்பதை உணர்த்தி வருகிறார். அதிலும் விஜய் ஹிந்து அல்ல அவரது பெயர் ஜோசப் விஜய் என்று அரசியல்வாதி ஒருவர் சொன்னதில் இருந்து தனது படங்களில் சிலவை அணிவதை குறிப்பிட்டு காண்பித்து வருகிறார் விஜய். மேலும், சர்கார் படத்தில் புகைபிடித்து சர்ச்சையில் சிக்கிய விஜய், இந்த படத்தில் மது அருந்தும் காட்சியில் நடித்துள்ளார். கண்டிப்பாக இதனை விஜய் சர்ச்சைக்காக செய்து இருப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement