ராஜ ராஜ சோழன் குறித்து வெற்றிமாறன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது அவரின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்புகலும் கிளம்பி இருக்கிறது. வெற்றிமாறனின் இந்த கருத்திற்கு பல பா ஜ க பிரமுகர்கள் குஷ்பூ, பேரரசு, வானதி ஸ்ரீநிவாசன், எச் ராஜா போன்ற பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது வெற்றிமாறன் கருத்திற்கு ஆதரவாக திருமாவளவன் பதிவிட்டு இருக்கிறார். தமிழில் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் வெற்றிமாறன் இவர் இயக்கிய அசுரன் விசாரணை போன்ற பல படங்கள் சமூக பிரச்சனைகளை எடுத்துச் சொல்லும் படமாக அமைந்திருந்தது.
மேலும் இவர் இயக்கிய ஆடுகளம் படத்திற்காக தேசிய விருதுகளும் கிடைத்திருந்தது. இப்படிப்பட்ட ஒரு நிலையில் இவர் ராஜராஜ சோழன் குறித்து பேசிய கருத்து வெறும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவானதில் இருந்து ராஜராஜ சோழன் பற்றிய கருத்துக்களும் அவர் எந்த மதத்தை சார்ந்தவர் போன்ற விவாதங்களும் சமூக வலைதளத்தில் அடிக்கடி நடந்து கொண்டு வருகிறது.
இதையும் பாருங்க : திருமணம் முடிந்து ஹனிமூன் சென்றுள்ள கோபி-ராதிகா. ஆமா, அங்க பாக்கியா என்ன பண்றாங்க ?
திருமாவளவனின் 60-வது பிறந்த நாள் :
சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் 60-வது பிறந்த நாளை அவருடைய கட்சியினர் கொண்டாடி இருந்தார்கள். இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டிருந்தார். அப்போது பேசிய அவர் ‘சினிமா என்பது வெகுமக்களை மிக எளிய மக்களை சென்றடைய கூடிய ஒரு கலை வடிவம். சினிமாவை அரசியல் மயமாக்குவது மிகவும் முக்கியம்.
திராவிட கையில் சினிமா :
திராவிடம் சினிமாவை கையில் எடுக்கும் போது கலை கலைக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று நிறைய பேசினார்கள். ஆனால், மக்களில் இருந்து விலகி எந்த கலையும் முழுமை அடையாது. மக்களுக்காக தான் கலை மக்களை பிரதிபலிப்பது தான் கலை. இந்த கலையை சரியாக இன்று நாம் கையாள வேண்டும். ஒருவேளை நாம் இன்று அதை தவறினால் ரொம்ப சீக்கிரமாக நிறைய அடையாளங்களை இழந்து விடுவோம்.
ராஜ ராஜ சோழன் குறித்து வெற்றிமாறன் :
வள்ளுவருக்கு காவி உடை கொடுக்கப்படுவதாக இருக்கட்டும் ராஜராஜ சோழன் ஒரு இந்து அரசனாக்குவது இருக்கட்டும் என்று பல அடையாளங்களை நம்மிடம் இருந்து எடுத்துக் கொண்டு வருகிறார்கள். இது சினிமாவிலும் நடக்கும்.சினிமாவிடம் இப்படி தொடர்ந்து அடையாளங்களை எடுக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும் என்று பேசி இருந்தார்.
வியும் எதிர்புகள் :
வெற்றிமாறனின் இந்த பேச்சுக்கு ஆதரவு ஒரு பக்கமும் எதிர்ப்புகள் ஒரு பக்கமும் வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட இயக்குனர் பேரரசு வெற்றிமாறனின் இந்த கருத்திற்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்ததோடு ராஜராஜ சோழன் இந்து அல்லாமல் அவர் என்ன முஸ்லிமா இல்லை கிறிஸ்துவரா என்றும் கேள்வி எழுப்பு இருந்தார். அதே போல நடிகை குஷ்பூவும் வெற்றிமாறன் பார்வையில் ஏதோ பிரச்சனை என்று பேசி இருந்தார்.
திருமாவளவன் பதிவு :
இப்படி ஒரு நிலையில் வெற்றிமாறனுக்கு ஆதரவாக பதிவு ஒன்றை போட்டுள்ள திருமாவளவன் ‘“இராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. மாறிமாறி மதமாற்றம் செய்து கொண்டன. அக்காலத்தில் ஏது இந்து? இக்காலத்து லிங்காயத்துக்களே தாங்கள் இந்துக்கள் இல்லை என்று உரத்துச் சொல்கின்றனர். போராடவும் செய்கின்றனர். இந்நிலையில் 1000 வருடங்களுக்கு முன்னர் லிங்கத்துக்குப் பெருங்கோயில் கட்டியதால் அவர்மீது இன்றைய அடையாளத்தைத் திணிப்பது சரியா? இது வரலாற்றுத் திரிபாகாதா? இதைத்தானே குறிப்பிட்டார் இயக்குநர் வெற்றிமாறன். அவர் பெரியாரின் பேரன்’ என்று பதிவிட்டுள்ளார்.