எந்த ஒரு சினிமா பின்னணி இல்லாமல் தமிழ் சினிமா உலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தவர் தல அஜித். இவர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். இவரை தமிழக மக்கள் எல்லாரும் செல்லமாக தல என்று தான் அழைப்பார்கள். கடந்த ஆண்டு அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது.
அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள். வலிமை படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார். அதோடு நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள்.
இதையும் பாருங்க : பல மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த பரவை முனியம்மா காலமானார்.
இந்நிலையில் பல வருடங்களுக்கு முன் தல அஜித் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ஆசை படத்தில் அஜித்துக்கு பிரபல நடிகர் வாய்ஸ் கொடுத்து உள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தல அஜித் அவர்களின் சினிமா வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைத்த படம் என்றால் அது ஆசை படம் தான். இயக்குனர் பாலச்சந்திரனிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த வசந்த் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது ஆசை படம்.
இந்த படத்தில் அஜித் குமார், சுவலட்சுமி, ரோகினி, பிரகாஷ்ராஜ், வடிவேலு, நிழல்கள் ரவி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தை மணிரத்னம் அவர்கள் தயாரித்திருந்தார். தேவா அவர்கள் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் காண்பிக்கப்பட்ட ஒவ்வொரு காதல் காட்சிகளும் அற்புதம். தல அஜித்துக்கு ஜோடியாக சுவலட்சுமி நடித்திருப்பார். இந்த படத்தில் தல அஜித்தின் ஒவ்வொரு நடிப்பும் அட்ராசிட்டி ஆக இருந்தது.
தற்போது கூட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்து வருகிறது. இந்த படத்தில் முதன் முதலில் சூர்யாவை தான் நடிக்க வைக்க எண்ணினார். அதற்குப் பிறகுதான் தல அஜித் நடித்தார். ஆரம்பகட்ட காலத்தில் தல அஜித் அவர்களுக்கு தமிழ் பேச மிகவும் தடுமாறுவார். அதனால் ஆசை படத்தில் தல அஜித் அவர்களுக்கு பிரபல நடிகர் சுரேஷ் அவர்கள் டப்பிங் கொடுத்துள்ளார். மேலும், இவர் தல அஜித்துடன் இணைந்து அசல் படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பாருங்க : முன்னழகு தெரியும்படி ரேஷ்மா பதிவிட்ட புகைப்படம். சன்னி லியோன் என்று கமன்ட் அடித்த ரசிகர்.
தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் சுரேஷ். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் அதிகம் நடித்து உள்ளார். இவர் 80 களில் தமிழ் திரைப்பட துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார். இவர் இதுவரை 275 படங்களுக்கும் மேல் நடித்து உள்ளார். தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார்.