சமீபகாலமாகவே ஒவ்வொரு சேனலும் தங்களின் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமாக நிகழ்ச்சிகளைக் கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி சர்வைவர் என்ற ஒரு ரியாலிட்டி ஷோவை ஒளிபரப்புகிறார்கள். வெவ்வேறு குணாதிசியங்கள் நிறைந்த மனிதர்களை சவால்கள் நிறைந்த ஓரிடத்தில் ஒன்று சேர்த்த பிறகு அவர்கள் கொடுக்கும் சவால்களை கடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சி தான் சர்வைவர்.
மேலும், ஜான்சிபார் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் போட்டியாளர்கள் தங்கியிருக்க அங்கிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் சர்வைவர். நடிகர் அர்ஜுன் முதல் முறையாக தொகுப்பாளராக இந்த நிகழ்ச்சி மூலமாக அறிமுகமாகிறார். சவால்கள் நிறைந்த தனித்தீவில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
இதையும் பாருங்க : பெரும் சர்ச்சையை பெண்கள் ஆடை குறித்த வசனம் – வெற்றிமாறனின் வீடியோவை பகிர்ந்து சந்தானத்தை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.
இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். இப்படி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆசைப்பட்டதாக சார்பட்டா பட நடிகர் சந்தோஷ் பிரதாப் கூறியுள்ளார். சந்தோஷ் பிரதாப் கதை திரைக்கதை வசனம் இயக்கம், தாயம், பயமா இருக்கு, பஞ்சராக்ஷரம், ஓமை கடவுளே, இரும்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது சார்பட்டா தான்.
இப்படி ஒரு நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போவதாவும் தகவல்கள் வெளியானது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறிய சந்தோஷ்,நான் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கவேண்டியது. ஆனால், சார்பட்டா படத்திற்கு பின்னர் ஒரு பிரேக் எடுத்துக்கொண்டேன். அதே போல எனக்கு சில நல்ல பட வாய்ப்புகள் கிடைத்ததாலும் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முடிவை நான் விட்டுவிட்டேன்.