பிகில் படத்தில் பெண்கள் அணிக்கு விஜய் சவால்விடும் காட்சியும் காப்பியா. வைரலாகும் வீடியோ.

0
5009
bigil
- Advertisement -

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படம் 300 கோடி வசூலை கடந்து சாதனை படைத்து வருகிறது. ஆனால், இந்த படம் வெளியாகும் முன்பே இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குநர் பன்னீர்செல்வம் என்கிற செல்வா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதே போல துணை இயக்குனர் செல்வா என்பவரும் இதே படத்தின் கதையை தயார் செய்து எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்ததாகவும் சில தயாரிப்பு நிறுவனங்களிடம் கதைச் சொல்லி இருந்ததாகவும் அதைத் திருடி பிகில் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் படத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

இப்படி பல்வேறு சர்ச்சைகளை இந்த படம் சந்தித்தாலும் இந்த படம் எந்த வித தடையும் இன்றி எதிர்பார்த்தபடி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. அதே போல இந்த படம் குறித்து பேசிய அட்லீ, மக்கள் ஏதாவது ஒன்னு சொல்லனும் என்பதற்காக வேறு படங்களுடன் ஒப்பிட்டு இந்த படம் காப்பி, ரீமேக் என்று கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். இது பாதுகாப்பற்ற தன்மை. மேலும், எனக்கு அந்த பாதுகாப்பற்ற தன்மை இல்லை என்றும் இந்த படத்தின் கதை உள்ளடக்கம் என்னுடையது. மேலும், நானும் அவர்கள் கூறிய படங்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். எனக்கும் அந்த படங்களில் இருக்கும் ஒரு சில காட்சிகள் ரொம்ப பிடிக்கும். மேலும், பிகில் படத்தில் இருக்கும் காட்சிகள் அந்த படத்தின் பாதிப்பில் இருந்து உருவானது அல்ல. என் மனதில் தோன்றியதை நான் இயக்கினேன் என்று அட்லி கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : இனி அசைவத்திற்கு நோ. 8 வருடத்திற்கு பின்னர் மீண்டும் விரதத்தை துவங்கிய நயன். காரணம் என்ன தெரியுமா ?

- Advertisement -

ஆனால், இந்த படத்தில் இடம்பெற்ற பல்வேறு காட்சிகள் வேறு படத்தில் இருந்து சுடபட்டது என்று இணையத்தில் பல்வேறு விடீயோக்கள் வளம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பிகில் படத்தில் ஒரு காட்சியில், நடிகர் விஜய் பெண்கள் அணிக்கு சரியாக கால்பந்தை குறிப்பிட்ட ஓட்டைக்குள்ள அடிக்க வேண்டும் என்று சவால் ஒன்றை விடுவார். அப்படி அவர்கள் அடிக்கத் தவறினால் மொத்த அணியினரும் ஓட வேண்டும் என்று பணிஸ்மண்ட்டையும் வழங்குவார். தற்போது விஷயம் என்னவெனில் இதே போன்று காட்சி ஒன்று 2018 ஆம் ஆண்டு வெளியான ‘தி மிராக்கள் சீசன்’ என்ற படத்தில் இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஏற்க்னவே பிகில் படத்தில் இடம்பெற்ற பல்வேறு காட்சிகள் பல்வேறு படங்களில் இருந்தும் சில பிரபலமான யூடுயூப் விடீயோக்களில் இருந்தும் சுட பட்டது என்று பல்வேறு விடீயோக்களை பிகில் படத்தின் காட்சிகளுடன் ஒப்பிட்டு இணையத்தில் வெளியிட்டு வரும் நிலையில் தற்போது பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள இந்த காட்சியும் இப்படி அட்லீ சுட்டிருக்கிறார் என்று அட்லீ மீண்டும் கிண்டலுக்குள்ளாகியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement