பொதுவாகவே உலகில் மிக பிரபலமான சாதனையாளர்களை வைத்து படம் இயக்குவது வழக்கமான ஒன்று. சமீப காலமாகவே அனைத்து சினிமா திரை உலகிலும் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்களை தந்து வருகிறார்கள். அதிலும் பெயர் மறந்த இந்தியர்களை வைத்து படம் உருவாக்குவது சினிமாவில் அவ்வபோது தான்நிகழும் . அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் “சூரரைப் போற்று”. இந்த படத்தின்ட்ரைலர் சமீபத்தில் தான் வெளியாகியுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும்.
இந்த ட்ரைலர் வெளியாகி மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். ஜி.ஆர்.கோபிநாத் அவர்கள் ஆரம்பத்தில் ராணுவ விமான கேப்டனாக பணியாற்றியவர். 2003 ஆம் ஆண்டு “ஏர் டெக்கான்” என்ற விமான நிறுவனத்தை தொடங்கினார். பின் 18 இருக்கைகள் கொண்ட விமானங்களை குறைந்த செலவில் அவர் இயக்கி வந்தார்.இவர் எப்படி தன் வாழ்க்கையில் தனிமனிதனாக போராடி உயர்ந்து உள்ளார் என்பது தான் படத்தின் கதை. இந்த விமானங்கள் எல்லாம் பெரும்பாலும் வட மாநிலங்களில் தான் இயங்கி வருகின்றன. அரசு அனுமதியுடன் அதிகபட்ச நிர்ணயம் 2500 ரூபாய் மட்டும் தான். 2017 ஆம் ஆண்டு மும்பை– நாசிக் நகரங்களுக்கு இடையே இந்த விமானம் இயக்கப்பட்டது. எதிர்காலத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த ஏர் டெக்கான் வரும் என்றும் திட்டமிட்டுள்ளார்.
சூரரை போற்று படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக ‘வானம் என்ன அவன் அப்ப வீட்டு சொத்தா, நீ பிலைட்ட ஏறக்கூட நான் பாத்துக்கற’ , உன்ன பத்தி 10 நிமிஷம் தான் யோசிச்சே, அதுக்கே இப்படி. அதுக்குமேல யோசிக்க வச்சிடாத ‘ போன்ற வசனங்கள் ரசிகரல்ல மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இந்த தீயான வசனங்களை எழுதியது வேறு யாரும் இல்லை தமிழில் உறியடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஆழமாக அடையாளத்தை பதித்த இயக்குனரும் நடிகருமான விஜயகுமார் தான்.
சாதித் தலைவர்களின் மனதில் எப்போதும் கனன்றுகொண்டிருக்கும் அரசியல் வேட்கையையும் சுயநலத்தையும் தோலுரித்துக் கட்ட முயன்றிருக்கும் படம் ‘உறியடி’. 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பற்றது.இந்த படத்தின் முதல் பாகத்தில் 1999ன் ஆம் ஆண்டு நடக்கும் கதையில் அந்தக் காலத்துக்குரிய அடையாளங்களைத் துல்லியமாகக் கொண்டுவந்திருந்தனர். தாபாவின் உட்புறத் தோற்றம், பொறியியல் கல்லூரியின் சூழல், சாதித் தலைவர் களின் சிலைகளை வைத்து நடந்த கலவரங்கள், சாதிக் கணக்குகளால் உருவாகும் சீர்கேடுகள் எனப் பல அம்சங்கள் நம்பகத்தன்மையுடன் சித்தரிக்கபட்டது.
இந்த படம் திரையரங்கில் வெளியான போது பலரும் பார்க்க தவறியவர்கள் பின்னர் இன்டெர்ன்ட்டில் பார்த்து இந்த படத்தை வெகுவாக பாராட்டினர். அதன் பின்னர் உறியடி 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதை தொடர்ந்து விஜயகுமார் கடந்த ஆண்டு ‘உறியடி 2’ படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தினை நடிகர் சூர்யா தான் தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தான் சூரரை போற்று படத்திலும் விஜயகுமாரையே வசனத்தை எழுத வைத்துள்ளார் சூர்யா.