இயக்குனர் வேலுதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் துடிக்கும் கரங்கள். இந்த படத்தில் விமல், மிஷா நரங், சதீஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஓடியன் டாக்கீஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்திருக்கிறார். இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் ஹீரோ விமல் youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இன்னொரு பக்கம் சங்கிலி முருகன் என்பவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர். இவர் தன்னுடைய சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வருகிறார். பின் இவர் தன்னுடைய மகனை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் விலை உயர்ந்த வண்டி ஒன்று நிற்கிறது. அது ஐஜி வண்டி. அந்த வண்டியின் உள்ளே சடலமாக ஐஜியின் மகள் இருக்கிறார். ஆனால், இந்த வழக்கை விபத்து என்று முடிக்கிறார்கள்.
இது திட்டமிட்ட கொலை என்பது பின் தெரிய வருகிறது. இருந்தும் சில காரணங்களால் இந்த வழக்கை ரகசியமாக விசாரிக்க இன்ஸ்பெக்டர் சௌந்தர்ராணை ஐ ஜி நியமிக்கிறார். இந்த சூழ்நிலையில்தான் விமல் தன்னுடைய நண்பர் சதிஷ் உடன் சேர்ந்து youtube சேனல் நடத்திக் கொண்டிருக்கும்போது சங்கிலி முருகன் இவர்களுடைய உதவியை நாடுகிறார். இறுதியில் விமல் அவருடைய மகனை கண்டுபிடித்தாரா? ஐஜி மகள் கொலைக்கும் மகன் தொலைந்து போன வழக்கிற்கும் என்ன சம்பந்தம்? இதெல்லாம் செய்வது யார்? பின்னணி என்ன? என்பதை ஆக்சன் திரில்லர் பாணியில் இயக்குனர் கொடுத்து இருக்கிறார்.
வழக்கம்போல் இந்த படத்தில் விமல் தன்னுடைய நடிப்பை கொடுத்திருக்கிறார். பெரிதாக எந்த ஒரு மாற்றமும் மாடுலேஷனும் இல்லை என்றே சொல்லலாம். உணர்வுகளை சரியாக கையாண்ட விமல் கதை தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். இவருடைய நண்பராக வரும் சதீஷ் வித்தியாச வித்தியாசமாக பல காமெடிகளை செய்ய முயற்சிக்கிறார். ஆனால், சிரிப்புதான் வரவில்லை. சில இடங்களில் இவர் செய்திருக்கும் காமெடி பார்வையாளர்கள் மத்தியில் கடுப்பை ஏற்றிருக்கிறது.
இவர்களை தொடர்ந்து கதாநாயகியாக வரும் மிசா தனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார். தவிர மற்றபடி கதைக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. இயக்குனர் கதைக்களத்தையும் அதைக் கொண்டு சென்ற விதத்தையும் சிறப்பாக செய்திருந்தால் படம் நன்றாக இருக்கும். படம் ஆரம்பத்தில் திரில்லராக கதையை காண்பித்து இருக்கிறார். அதற்குப்பின் வழக்கம்போல தான் அரைத்த மாவை இந்த படத்திலும் இயக்குனர் அரைத்து இருக்கிறார்.
படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சுவாரசியமும் ஆக்சன் திருளும் இல்லை என்றே சொல்லலாம். இரண்டாம் பாதி முழுவதுமே அடுத்து என்ன நடக்கும் என்று பார்வையாளர்களே யூகிக்க கூடிய அளவிற்கு காட்சிகள் இருக்கிறது. படத்தில் பல விழிப்புணர்வுகளை இயக்குனர் சொல்ல முயற்சி இருக்கிறார். ஆனால், அதை கொண்டு செல்லும் விதத்தில் தான் சொதப்பி விட்டார். நிறைய தேவையற்ற குளோசப் காட்சிகள் இருக்கின்றது.
அதுமட்டுமில்லாமல் வித்தியாசமான ஸ்லோ மோஷன் சாட்டுகளை காண்பித்து இருக்கிறார். அது எதற்கு என்றே தெரியவில்லை. இதை எல்லாம் கட் செய்து விட்டு படத்தை காண்பித்து இருந்தாலே நன்றாக இருந்திருக்கும். பாடல்களும் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை. பின்னணி இசை சில இடங்களில் இரைச்சலை கொடுத்திருக்கிறது. மொத்தத்தில் விமலின் துடிக்கும் கரங்கள் படம் ரொம்ப சுமாரான படமாக தான் இருக்கிறது. நடிகை விஜயலட்சுமி புகார் குறித்த விசாரணைக்கு இன்று ஆஜராகும்படி சம்மன் அனுப்பிய நிலையில் ஈரோட்டில் இன்று நடைபெறும் கட்சி கூட்டத்தில் பங்கேற்ப இருப்பதால் விசாரணைக்கு ஆஜராகாத சீமான்
நிறை:
நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
சமூக கருத்துள்ள படம்
ஒளிப்பதிவு ஓகே
முதல் பாதி ஆரம்பத்தில் நன்றாக இருக்கிறது
மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றுமில்லை
குறை:
இயக்குனர் கதைக்களத்தில் அதிக கவனமே செலுத்தி இருக்க வேண்டும்
பின்னணி இசை சரியில்லை
பாடல்கள் பெரிதாக கவரவில்லை
இரண்டாம் பாதி சொதப்பி இருக்கிறார்
எந்த ஒரு சுவாரசியமும் சுவாரசியமும் சஸ்பென்சும் படத்தில் இல்லை
மொத்தத்தில் துடிக்கும் கரங்கள் படம் – கொஞ்சமாக துடித்து விட்டு சென்றது