அம்மா உணவகத்தில் தான் சாப்பிடுறேன், அதான் இப்படி ஆகிட்டேன் – துள்ளுவதோ இளமை பட நடிகரின் பரிதாப நிலை.

0
147356
abhi
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை எத்தனையோ நடிகர்கள் ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விடுகின்றனர். அந்த வகையில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த இவரை 90ஸ் கிட்ஸ்கள் நிச்சயம் மறந்திருக்க வாய்ப்பில்லை. தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான படம் ‘துள்ளுவதோ இளமை’ கஸ்தூரி ராஜா இயக்கிய இந்த படத்தின் மூலம் தான் நடிகர் தனுஷ், ஷெரின் போன்றவர்கள் அறிமுகமாகினர். அந்த வகையில் இதே படத்தில் தனுஷின் நண்பராக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அபினய்.

-விளம்பரம்-

பெரும்பாலும் சாக்லேட் பாய் முத்திரையை பெற்றுவிட்டாலே சினிமாவில் நிலைத்து நிற்பது கொஞ்சம் கடினமான விஷயம் தான். அவர்களை ஆக்ஷன் ஹீரோக்களாக ஏற்றுக்கொள்ள கொஞ்சம் காலம் எடுத்துவிடும். ஆனால், சாக்லேட் பாய் முத்திரையை போக்குவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. இதே கதை தான் அபிநய்க்கும் நந்தது. துள்ளுவதோ இளமை படத்திற்கு பின்னர் பல்வேரு படங்களில் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : சேத்துல விழுந்து அசிங்கப்படுத்திக்க விரும்பல – வனிதா செய்த அநாகரீக செயல் பற்றி சொன்ன நகுல். வைரல் வீடியோ.

- Advertisement -

மேலும், ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்த உள்ளார், ஆனால், இவர் ஹீரோவாக நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. இதனால் இவர் பல்வேறு விளம்பரங்களில் கூட நடித்தார். அதே போல தொடர்ந்து அமெரிக்க மாப்பிளை, இரண்டாம் ஹீரோ என்று தான் இவருக்கு வாப்புகள் கிடைத்தது. இறுதியாக சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்து இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் பேசுகையில், துள்ளுவதோ இளமை படத்திற்கு பின்னர் எட்டு படங்களில் என்னை புக் செய்தார்கள். ஆனால், நான் ஹீரோவாக நடித்த படம் ஓடவில்லை என்பதால் அந்த மீதி படங்கள் அனைத்தும் போய்விட்டது. எப்போதும் நான் அமெரிக்க மாப்பிள்ளையாக தான் இருக்கிறேன்.அம்மா இறந்த பின்னர் வறுமை, எல்லாத்தையும் வித்துட்டேன். அம்மா உணவகத்தில் தான் சாப்பிட்டேன். அதுனால் தான் இப்படி உடல் எடை கொறஞ்சடுச்சி என்று மிகவும் உருக்கமுடன் பேசி இருக்கிறார். இவரது இரண்டாம் படத்திற்கான சம்பளம் இன்னும் 60 ஆயிரம் பாக்கி உள்ளது என்றும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement