விஜயுடனான பொங்கல் ரேஸில் வென்றாரா அஜித் – துணிவு முழு விமர்சனம் இதோ.

0
1054
thunivu
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் தற்போது நடித்துள்ள படம் துணிவு. இந்த படத்தை போனி கபூர் தயாரித்து, வலிமை, சதுரங்காக வேட்டை இயக்குனர் எச் வினோத் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, யோகி பாபு, பிக் பாஸ் பாவனி, அமீர் என பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் “துணிவு” படம் `இன்று தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகரான விஜய் நடித்த “வாரிசு” பாடத்துடன் ஒன்றாக வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அஜித் நடித்த துணிவு படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

கதைக்களம் :

இப்படம் வாங்கிக்கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படமாகும். அஜித் முன்பு நடித்த படங்களை போல இப்படத்தில் ஒரு குழுவை வைத்து அஜித் கொள்ளையடிக்கிறார? என்றால் அங்கேதான் ட்விஸ்ட் இருக்கிறது. இந்தியாவில் வளர்ந்து வரும் Your Bank என்ற வங்கியை கொள்ளையர்கள் தங்கள் வசப்படுத்துகின்றனர். வங்கியையும் அங்குள்ள மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை சமுத்திரக்கனி ஏற்கிறார். அவர்களுக்கு சவால் விடும் வேலையே அஜித் செய்து வருகிறார். வங்கியில் நடக்கும் மோசடிகளை மக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் வகையில் மாசான வில்லனாக அஜித் நடித்திருக்கிறார். சர்வதேச அளவில் ஏஜெண்டாக செயல்படும் ஒரு கும்பல் ஏன்? இந்தியாவில் உள்ள ஒரு வங்கியை மட்டும் குறிவைத்து கொள்ளையடிக்கின்றனர் என்பதும், அவர்கள் எதற்காக கொள்ளையடிக்கின்றனர்? அவர்களை சுற்றி நடக்கும் விஷயங்கள் என்ன? என்பதை மையத்தமாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அஜித் மற்றும் வினோத் இணைந்த பணியாற்றிய படமான “வலிமை” படத்திற்கு பிறகு இப்படத்தில் அஜித்துடன் மீண்டும் இணைத்திருக்கிறார் இயக்குனர் வினோத். படத்தில் அஜித் பார்க்கும் அனைவரையும் சுட்டு தள்ளுகிறார். முதல் பாதி கால்களில் ராக்கெட்டுகளை காட்டியது போல மிகவும் விறுவிறுப்பாக செய்கிறது. படத்தில் கொஞ்சம் உண்மை தண்மை குறைவாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் தான் கதையே ஆரம்பமாகிறது. இரண்டாம் பாதியில் கொஞ்சம் ஸ்லோவாக தெரிந்தாலும் பின்னணி இசையில் அதனை சரிபடுத்தியிருக்கின்றனர்.

படத்தில் அஜித் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நியாயமாகவும், தன்னுடைய தனித்தன்மையான உடல் மொழியிலும் நடித்திருக்கிறார். மஞ்சு வாரியார் அஜித்துடன் துணையாக நவீன் ஆயிதங்களை கையாளும் சிங்கபெண்ணாக வருகிறார். மேலும் வில்லனாக வரும் ஜான் கொக்கைன் மற்றும் சமுத்திரக்கனி, பிற கதாப்பாத்திரங்கள் தங்களுக்கு கொடுத்த வேலையே சரியாக செய்திருக்கின்றனர். இப்படத்தில் தொடக்கம் முதல் கடைசி வரையில் சண்டைக்காட்சிகளுக்கு அளவே இல்லை பெரும்பாலும் துப்பாக்கியும், கையுமாகவே கதை நகருகிறது. ஹாலியுட் பட அளவிற்கு துணிவு படத்தை எச் வினோத் எடுக்க முயற்சி செய்தது நன்றாகவே தெரிகிறது.

-விளம்பரம்-

நிறை :

அஜித் ஒன் மேன் ஆர்மியாக நடித்திருக்கிறார்.

மஞ்சு வாரியாரின் நடிப்பு சப்றைஸ் தான்.

பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கின்றனர்.

வசனங்கள் மக்களை கவனிக்க வைக்கின்றன.

குறை :

கமர்சியல் படம் என்பதினால் அதிக லாஜிக் மிஸ்டேக்குகள் இருக்கின்றது.

கதை சில இடங்களில் மெதுவாக செய்கிறது.

உண்மை தன்மை குறைவாக இருக்கிறது.

கிளைமாக்ஸ் திருப்தியாக இல்லை.

மொத்தத்தில் இயக்குனர் வினோத்தின் “துணிவு” படம் ஸ்மால் பட்ஜெட் “சங்கர்” படம் கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்கலாம்.

Advertisement