என்ன இது ஒரே மாதிரி இருக்கு – அருண்விஜய் படத்தில் இருந்து துணிவு படத்தில் சுடப்பட்டுள்ள விஷயம்.

0
681
thunivu
- Advertisement -

அஜித்தின் துணிவு படத்தின் போஸ்டர் குறித்த சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. இதனாலே இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். இந்த படம் பல மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர். அதோடு இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

துணிவு படம்:

மேலும், இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதால் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார். அதோடு இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. இதனால் அஜித் இந்த படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்து இருக்கிறாராம். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் சிஜோய் வர்கீஸ், ஜான் கொகைன், வீரா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

படம் குறித்த தகவல்:

இந்த படம் ஒரு வங்கி கொள்ளை சம்மந்தமான கதை என்ற தகவல் அனைவரும் அறிந்த ஒன்று. சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்திற்கான பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டது. இன்னும் சில காட்சிகள் மட்டும்தான் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் கூடிய விரைவில் இந்த படத்திற்கான போஸ்ட் பிரகடக்சன் பணிகள் எல்லாம் முடிவடைந்து விடும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

துணிவு படத்தின் போஸ்டர் குறித்த சர்ச்சை:

சமீபத்தில் சென்னை மவுண்ட் ரோட்டில் இந்த படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்தது. அந்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலானது. இந்நிலையில் துணிவு படத்தின் போஸ்டர் குறித்த சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, அஜித்தின் துணிவு படத்தின் போஸ்டரில் NO GUTS NO GLORY என்ற வசனம் வந்திருக்கும். இதை ஏற்கனவே அருண் விஜய் நடித்த வேதா படத்தில் வந்திருக்கிறது.

வேதா படம்:

தற்போது இதை ரசிகர்கள் பார்த்து கில்லி படத்தில் பிரகாஷ்ராஜ் பேசும் வசனத்தை வைத்து கிண்டல் செய்து வருகிறார்கள். இயக்குனர் நித்யகுமார் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த படம் வேதா. இந்த படத்தில் அருண் விஜய், ஜெயமாலா, ஷீலா,கருணாஸ், மயில்சாமி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் வெளியாகி பெரிய அளவில் வெற்றி அடையவில்லை.

Advertisement