டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து தற்கொலை முயற்சி – மருத்துவமனையில் அனுமதி. இது தான் காரணமாம்.

0
2777
gpmuthu
- Advertisement -

 ”டிக்டாக் நண்பர்களே” என்ற வார்த்தையை கேட்டதும் டிக் டாக் ரசிகர்களுக்கும் நினைவிற்கு வருவது இந்த ஜி பி முத்து தான். இவரது நெல்லைப் பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று டிக்டாக்கில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் இவரும் ரவுடி பேபி சூர்யா என்பவரும் இணைந்து போட்ட கூத்துக்கள் ஏராளம். இதனால் தனது குடும்பத்தில் கூட பிரச்சனை வந்ததாக ஜி பி முத்து கூறி இருந்தார்.

டிக் டாக் தடை செய்யப்பட்டதால், டிக் டாக்கில் இருந்த பலரும் இன்ஸ்டாகிராமில் வீடியோகளை பதிவிட துவங்கினர். அந்த வகையில் ஜி பி முத்துவும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து அவர் வீடியோக்களை வெளியிட்டுவந்தார். ஆனால், சமீபத்தில், குடும்ப பிரச்சனை காரணமாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவேற்றம் செய்ய முடியவில்லை என்று வருத்தத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்ஜி.பி முத்து.

இதையும் பாருங்க : கமலுடன் கிஸ்ஸிங் சீனில் நடிச்ச மத்த நடிகைகளை விட உங்களுக்கு ஒரு பெருமை இருக்கு, என்ன சொல்லுங்க ? ரேகாவை பங்கமாக கலாய்த்த சுரேஷ். Unseen வீடியோ இதோ.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் ஜி பி முத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ரௌடி பேபி சூர்யா கூட தற்கொலைக்கு முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் . தனது இன மக்களுக்கு எதிராக வீடியோ வெளியிட்டதாக, வனவேங்கைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் உலகநாதன் ஜி.பி.முத்துவுக்கு எதிராக தூத்துக்குடி போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து ஜி பி முத்து, குறிப்பிட்ட பிரிவினர் குறித்து அவதூறாக பேசி வந்ததால். முதல்வர் தனிப்பிரிவிலிருந்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி, அப்புகார் தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு அனுப்பப்பட்டது. இந்த விவகாரத்தில், உடன்குடியில் இருந்த ஜி.பி.முத்துவை புதன்கிழமை குலசேகரபட்டினம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று விசாரித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

 

Advertisement