நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கை எடுக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு. இதான் காரணம்.

0
350
vigneshshivan
- Advertisement -

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினர் காலணி அணிந்து போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் சம்பவத்தால் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக இருந்தவர்கள் நயன்-விக்கி. இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகிலும், வெளி உலகிலும் வலம் வந்து கொண்டிருந்தாலும் இருவரும் படங்களில் பிசியாக பணி புரிந்து வருகிறார்கள். இருந்தாலும் இவர்களின் திருமணம் எப்போது? என்பது தான் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த விஷயமாக இருந்தது.

-விளம்பரம்-

அனைவரும் எதிர்பார்த்த படி நயன்-விக்கி திருமண விழா மெஹந்தி நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது. அந்த விழாவில் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 100 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர். அதுமட்டும் இல்லாமல் அந்த நிகழ்ச்சியில் பல வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்று இருந்தது. அதே போல் வந்தவர்களுக்கு நயன்தாரா- விக்னேஷ் சிவன் புகைப்படம் ஸ்டிக்கர் ஒட்டிய தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டிருந்தது. பின் அடுத்த நாள் வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது.

இதையும் பாருங்க : ரௌடி, மேடை நாடகம், குரூப் டான்சர், 50 ரூபாய் சம்பளம் – குக்கூ, பிச்சைக்காரன் பட நடிகர் யார் தெரியுமா ?

- Advertisement -

விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் :

மேலும், அனைவரும் எதிர்பார்த்த ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. கடற்கரை ஓரம் திறந்தவெளியில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் காலை 9 மணி முதல் இந்து பாரம்பரிய முறைப்படி மணமகள் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டி இருந்தார். இந்த திருமணத்தில் இரு வீட்டாரும், அவருடைய நெருங்கிய நண்பர்களும், சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். திருமணத்தில் வெளியாட்கள் யாரும் பங்கேற்க அழைப்பில்லை.

திருமணத்தில் போட்ட கட்டுப்பாடு:

திருமணத்திற்கு வருபவர்கள் அழைப்பேசி, கேமரா உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல அனுமதி இல்லை. முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள். திருமணம் நடைபெறும் கடற்கரை வீதியை சுற்றி 100க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள். இந்த திருமண நிகழ்வு ஓடிடி ஒன்றில் வெளியாக இருக்கிறது. மிகவும் ஆடம்பரமாக பிரம்மாண்டமாய் திருமணம் நடத்தி இருந்தார்கள். இவர்களுடைய இல்லற வாழ்வு சிறக்க திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இவர்களுடைய திருமண உடைகள் புகழ்பெற்ற ஜேட் குழுமத்தால் இருவருடைய விருப்பப்படி தனித்துவமாய் வடிவமைக்கப்பட்டிருந்தது.

-விளம்பரம்-

திருப்பதி கோவிலில் நயன்-விக்கி செய்த செயல்:

நடிகை நயன்தாரா சிவப்பு நிற புடவை அணிந்திருந்தார். நவீன காலத்திற்கு ஏற்றவாறு பாரம்பரியம் சற்றும் குறையாத வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது. மணமகன் விக்னேஷ் சிவன் வேஷ்டி குர்த்தி மற்றும் சால்வை ஒன்றை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், திருமணம் முடிந்த கையுடன் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருப்பதிக்கு சென்றிருந்தார்கள். திருப்பதி மலையில் தம்பதிகள் ஏழுமலையான் கல்யாண உற்சவம் சேவையில் கலந்து கொண்டிருந்தார்கள். கோவிலுக்கு வெளியே காலணி அணிந்து நடமாட தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் ஏழுமலையான் கோவில் முன்புறம் உள்ள பகுதியில் காலணியுடன் சென்று இருவரும் போட்டோ ஷூட் நடத்தி இருந்தார்கள். தற்போது இது குறித்து தான் சோசியல் மீடியாவில் விவாதமாகவே மாறியிருக்கிறது.

தேவஸ்தான நிர்வாகம் கூறியது:

இந்நிலையில் இதை அறிந்த தேவஸ்தான நிர்வாகம் கூறி இருப்பது, நடைபெற்ற தவறுக்கு யாரும் காரணம் என்று விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஏழுமலையான் கோவில் முன் உள்ள பகுதி, நான்கு மாட வீதிகள், லட்டு கவுண்டர்,கோவில் திருக்குளம் ஆகிய இடங்களில் காலணியுடன் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு போட்டோ ஷூட் நடத்த தேவஸ்தானம் இடம் உரிய அனுமதி பெற வேண்டும். இதற்கு முன் இது போல் யாரும் கோவில் உள்ளே போட்டோ ஷூட் நடத்தியது கிடையாது. இது பற்றி அவர்களிடம் தகுந்த விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு ஊழியர்கள் அவர்கள் தகுந்த அறிவுரை கூறி அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்த தவற விட்டனர் என்று கூறி இருக்கிறது.

Advertisement