மாற்றுத்திறனாளி திருமூர்த்தி பாடலை வெளியிட்ட முதல்வர் – அப்படி என்ன பாடல் பாருங்க. வீடியோ இதோ.

0
1094
thirumoorthy
- Advertisement -

மாற்றுத்திறனாளி திருமூர்த்தி பாடிய பாடலை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக அஜித் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படம் மட்டும் இல்லாமல் படத்தில் வந்த பாடல்கள் எல்லாமே ரசிகர்கள் மனதை கவர்ந்தது. அந்த வகையில் படத்தில் இடம் பெற்ற ‘கண்ணான கண்ணே’ என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.

-விளம்பரம்-

இந்த பாடலை மாற்றுத்திறனாளி திருமூர்த்தி என்பவர் பாடி சமூகவலைத்தளங்களில் பிரபலமானது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. மேலும், திருமூர்த்தி பாடிய இந்த கண்ணான கண்ணே பாடலைப் பார்த்து இமான் அவர்கள் திருமூர்த்தியை நேரில் அழைத்து அடுத்த படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு தருகிறேன் என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து திருமூர்த்தி தற்போது பல பாடல்களை பாடி வருகிறார். இந்த நிலையில் தற்போது திருமூர்த்தி பாடிய பாடல் ஒன்றை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : பாரதி கண்ணம்மாவில் இருந்து லீட் ரோல் விலகலா ? இவர் போயிட்டா சீரியலின் கதி ? முடிச்சிடுவாங்கலோ.

- Advertisement -

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் தேதி நாளன்று இயற்கை பேரிடர்களின் போது மக்களின் உயிரைக் காப்பதற்காக உயிர் நீத்த காவல்துறையை சேர்ந்த வீரர்களின் நினைவை போற்றும் வகையில் ‘வீரவணக்க நாள்’ கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு வீரவணக்க நாளை முன்னிட்டு ஜிப்ரான் இசையில் மாற்றுத்திறனாளி திருமூர்த்தி மற்றும் சசிகலா இணைந்து பாடலொன்றை பாடி உள்ளார்கள்.

இந்த பாடலை தலைமை காவலர் சசிகலா மற்றும் வெஸ்லி ஆகியோர் எழுதியுள்ளார்கள். வீரவணக்கம் என்ற பெயர் கொண்ட இந்த ஆல்பத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த பாடல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை ரசிகர்கள் அனைவரும் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement