அரசியல்வாதிகளுக்கு வந்தா ரத்தம், ரசிகருக்கு வந்தால் தக்காளி சட்னியா ? விஜய்க்கு பால்முகவர் சங்க நிர்வாகி கேள்வி

0
202
Beast
- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். பொதுவாக விஜய் படங்கள் என்றாலே அதில் அரசியல் வசனங்கள் இடம்பெறுவது வாடிக்கையான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அந்த வகையில் பீஸ்ட் படத்தில் கூட இந்த அரசியல் விளையாட்டெல்லாம் என்கிட்ட வேண்டாம், நான் அரசியல்வாதி கிடையாது என்று பேசிய வசனம் இடம்பெற்று இருந்தது.அதே போல அந்த ட்ரைலரில் விஜய்யின் இன்ட்ரோவில் கத்தியை வைத்து காவி நிற துணியை கிழிப்பது போல காண்பிக்கப்பட்டது. இதனால் நடிகர் விஜய் காவிகளை கிழிக்க வந்துவிட்டார் என்று சமூக வலைதளத்தில் ரசிகர்கள் சிலர் பதிவிட துவங்கியதும், திடீரென பிரதமர் மோடி இருக்கும் காவித்துணியை விஜய் கிழிப்பது போன்ற புகைப்படமும் சமூகவலைதளங்களில் வைரலானது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-147-1024x584.jpg

இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய பா.ஜ.க ஆதரவாளர்கள், விஜய் ரசிகர்கள் இவ்வாறு செய்வது அரசியல் நாகரீகமல்ல. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்படும் என அறிவித்தனர். சினிமா தயாரிப்பாளரும், பாஜகவைச் சேர்ந்தவருமான ஜே.எஸ்.கே கோபி, டிவிட்டரில் இது குறித்து கண்டனத்தை பதிவு செய்தார். விஜய் மக்கள் இயக்கத் தலைவர் புஸ்ஸி ஆனந்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

- Advertisement -

விஜய் வெளியிட்ட அறிக்கை :

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடிகர் விஜய்யின் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அரசு பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சித் தலைவர்களை மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில், பத்திரிகைகளில், இணையதளங்களில், போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது. அப்படி வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is 1-668.jpg

பால்முகவர் சங்க நிர்வாகி

இந்த நிலையில் உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?. என்று பால்முகவர் சங்க நிர்வாகி பொன்னுசாமி விஜய்க்கு கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், அரசு அதிகாரிகளை, அரசியல்வாதிகளை சமூக வலைதளங்களிலோ, போஸ்டர் மூலமோ, பொதுவெளிகளிலோ அவமானப்படுத்தினால் விஜய் மக்கள் இயக்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ள விஜய் அவர்கள் தனது திரைப்பட வெளியிட்டு சமயங்களில் தனக்கோ திரைப்பட காட்சிகள் குறித்தோ

-விளம்பரம்-

அரசு அதிகாரிகளுக்கும் வந்தால் மட்டும் ரத்தம்

கட்அவுட் வைத்து அதன் மேலேறி அதற்கு மாலை அணிவித்து, பாலாபிஷேகம் செய்கிறேன் என்கிற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வீண் வேலைகளில் ஈடுபட கூடாது எனவும், தங்களின் உயிரை துச்சமாக எண்ணி அவ்வாறு செயல்படுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி ரசிகர்களை நல்வழிப்படுத்த ஏன் முன் வரவில்லை..? அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் வந்தால் மட்டும் ரத்தம், ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் என்றால் அது தக்காளி சட்னியா சிந்திப்பாரா..? என்று கேள்வி எழுப்பி இருகிறார்.

ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகார் :

ஏற்கனவே , பீஸ்ட் படத்தின் கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்த விஜய் ரசிகர்கள் குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் காவல் ஆணையர் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் ஒன்று அளிக்கப்பட்டு இருந்தது. அந்த புகாரில் பீஸ்ட் பட கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் திரையரங்குகளில் எந்த ஒரு நடிகரின் கட்டவுட்களின் மீது ஏறி மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்வதற்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Advertisement