ரோடு நல்லா இல்லனு சொன்னா லைன்ஸ கேன்சல் பண்ணுவீங்களா – வீலிக் செய்து விழுந்துவிட்டு அரசை வீம்பு பேசிய யூடுயூபர்.

0
384
- Advertisement -

பைக் ஸ்டண்ட் செய்து விபத்தில் சிக்கிய இளைஞர் முரளி கிருஷ்ணனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சில ஆண்டுகளாகவே சோசியல் மீடியாவில் பைக் ஸ்டண்ட் செய்து இளைனர்கள் பதிவிடும் வீடியோ அதிகமாகி கொண்டு வருகிறது. அந்த வகையில் பைக் ஸ்டண்ட் மூலம் பிரபலமானவர் TTF வாசன் . கடந்த செப்டம்பர் மாதம் TTF வாசன் பைக் ஸ்டண்ட் செய்து விபத்தில் சிக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இதனால் TTF வாசன் மீது பாலுச்செட்டி சத்திரம் காவல் துறையினர் 279 IPC மனித உயிருக்கு ஆபத்து உண்டாகும் வகையில் மனித காயம் அல்லது தீங்கு ஏற்படும் விதத்தில், ஒரு வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுவது, 308 IPC பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் முறையில் அசட்டுத் துணிச்சலுடன் வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து இருந்தார்கள். மேலும், TTF வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இதே போல் பைக் ஸ்டண்ட் செய்த இளைஞர் முரளி கிருஷ்ணன் விபத்தில் சிக்கி ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கோவையில் புளியங்குளம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன். இவருக்கு 27 வயதாகிறது. இவர் பைக் ஷோரூமில் பணியாற்றி வருகிறார். இவர் பைக் ஸ்டண்ட் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் போக்குவரத்து நெரிசல்கொண்ட சாலைகளில் பைக் ஸ்டண்ட் செய்து அந்த வீடியோவை இணையதள பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.

விதிமுறைகளை மீறி பாதுகாப்பற்ற முறையில் பைக் ஸ்டன்டுகளை செய்திருக்கிறார். இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இவரை எக்கச்சக்கமான ரசிகர்களும் பாலோ செய்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி முரளி கிருஷ்ணன் பைக் ஸ்டண்ட் செய்ய முயற்சிக்கும் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் அவரது இடது கால், இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

இதனை அடுத்து இவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் விபத்து ஏற்பட்டு இருப்பது தொடர்பாகவும் இவர் வீடியோ எடுத்து வெளியேற்றி இருக்கிறார். இவரின் இந்த வீடியோ கோவை மாநகர காவல் துறை கவனத்திற்கு வந்திருக்கிறது. இதைக் கண்டு போலீசார் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். மேலும், இது தொடர்பாக போக்குவரத்து துறையினர் வழக்கு பதிவு செய்து அவருடைய ஓட்டுநர் உரிமையை ரத்து செய்து இருக்கிறார்கள்.

இதனை அடுத்து சாலைகளில் பாதுகாப்பற்ற முறையில் ஸ்டண்ட்களை செய்யும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவையில் மட்டும் இதுபோன்று பைக் ஸ்டண்ட் செய்து சோசியல் மீடியாவில் வீடியோ பதிவிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக முரளி கிருஷ்ணன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், ரோடு சரியில்லை என்று எனக்கு விபத்து ஆனது. அதைப்பற்றி கேட்டதற்கு பப்ளிக் வயலன்ஸ் என்று கேஸ் போட்டு லைசென்ஸும் கேன்சல் பண்ணிட்டீங்க. யாரும் உங்கள எதிர்த்து கேள்வி கேட்கக்கூடாது இல்லையா? அரசாங்கத்திற்கு என்னுடைய தலைவணக்கம். என்ன பிரச்சனை என்று கேட்காம பொய்யா நியூஸ் போடுறீங்கடா டேய் என்று ஆதங்கத்துடன் பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement