குடிசை வீடு, தேர்தல் செலவுக்கு ரூ.3,000, பழைய டூ வீலர் – இருந்தும் ஜெயித்து மாஸ் காண்பித்த CPI வேட்பாளர்.

0
1075
mari
- Advertisement -

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவிற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். அதே போல மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் கட்சி என்று பல்வேறு புதிய கட்சிகளும் தேர்தலில் களம் கண்டனர்.

-விளம்பரம்-

கொரோனா பிரச்சனை காரணமாக தேர்தல் வாக்கு எண்ணிக்கை தள்ளி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி இன்று (மே 2) தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 160 தொகுதிகளில் முன்னணி வகித்து திமுக தனது வெற்றியை ஏற்கனவே உறுதி செய்துவிட்டது. இதனால் தி மு க தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் பாருங்க : ரம்யா பாண்டியனின் முகத்தில் அறுவை சிகிச்சை – எதற்கு தெரியுமா ? (இதுநாள் தான் பிக் பாஸ்ல அப்படி இருந்தாரா)

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் திருத்துறைப்பூண்டி  தொகுதியில் திமுக கூட்டணியில் இணைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட மாரிமுத்து, அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட சுரேஷ்குமாரை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளார்.தேர்தலில் போட்டியிட முதல் தகுதியாக, செலவு செய்யப் பணம் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிப்போன சமகாலத்தில், 3,000 ரூபாயை வைத்துக்கொண்டு வேட்பாளராகக் களமிறங்கிவர் மாரிமுத்து.

மாரிமுத்துவின் வீடு

திருத்துறைப்பூண்டி அருகே காடுவாக்குடி என்ற ஊரில் ஒரு சில ஓலை குடிசையில் வசித்து வருகிறார் மாரிமுத்து. அங்கே தான். அவரின் தாய் தங்கம்மாள், மனைவி ஜெயசுதா, மகள் தென்றல், மகன் ஜெயவர்மன் ஆகியோருடன் வசித்துவருகிறார். தேர்தல் பிரச்சாரத்துக்கு அனைவரும் ஹெலிக்கப்பட்டார் முதல் டெம்போ என்று பறந்த நிலையில் இவரோ ஒரு பழைய டூ வீலரில் பிரச்சாரம் செய்தே தற்போது வென்றுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement