90ஸ் கிட்ஸ்களை சோகத்தில் ஆழ்த்திய மரணம். டாம்&ஜெர்ரி, பாப்பாய் கார்டூன்களை உருவாக்கிய இயக்குனர் காலமானார்.

0
816
tomnjerry
- Advertisement -

ஹாலிவுட் திரையுலகில் அனிமேட்டர், காமிக்ஸ் ஆர்டிஸ்ட், திரைப்பட இயக்குநர் என பன்முகம் கொண்டவர் ஜீன் டெயிட்ஜ். சிறு வயதில் நாம் எல்லோருமே ஒரு விஷயத்தை கடந்து தான் வந்திருப்போம். அது தான் ‘டாம் & ஜெர்ரி’ கார்ட்டூன் சீரியல். இந்த ‘டாம் & ஜெர்ரி’ கார்ட்டூன் எப்பொழுது பார்த்தாலும் நமக்குள் சிரிப்பை வரவழைத்து கொண்டே இருக்கும். அது தான் இதன் ஸ்பெஷாலிட்டி. ‘டாம் & ஜெர்ரி’ கார்ட்டூன் சீரிஸுக்கு உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.

-விளம்பரம்-
 director Gene Deitch

பார்த்த சீரிஸையே திரும்பவும் பார்த்தாலும், ஜெர்ரி செய்யும் சேட்டை, டாமின் வித்தியாசமான ரியாக்ஷன்ஸ், மிக சூப்பரான பின்னணி இசை என இதற்கு பல சிறப்புகள் இருப்பதால் தொடர்ந்து பார்க்க வைத்துக் கொண்டே இருக்கிறது. இந்த ‘டாம் & ஜெர்ரி’ சீரிஸை 1961 முதல் 1962-ஆம் ஆண்டு வரை இயக்கியவர் தான் இயக்குநர் ஜீன் டெயிட்ஜ்.

இதையும் பாருங்க : மூன்றரை வயதில் இறந்த தங்கை. சிறு வயதில் தனது குடுப்பதுடன் விஜய். அறிய புகைப்படம் இதோ.

- Advertisement -

நம்மை சிறு வயது முதல் இப்போது வரை தொடர்ந்து சிரிக்க வைத்து வந்த ‘டாம் & ஜெர்ரி’ சீரிஸின் இயக்குநர் ஜீன் டெயிட்ஜ் காலமானார் என்ற மிக வருத்தமான செய்தி வந்திருக்கிறது. இவருக்கு வயது 94-ஆம். கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி பிராகா நாட்டில் காலமானாராம். நம் சிறு வயதில் ‘டாம் & ஜெர்ரி’யை போல் இன்னொரு கார்ட்டூன் சீரிஸையும் நாம் விரும்பி பார்த்திருக்கிறோம்.

Gene Deitch

அது தான் ‘பாப்பாய் தி செய்லர்’ கார்ட்டூன் சீரிஸ். இந்த சீரிஸை 1960-ஆம் ஆண்டிலிருந்து 1962-ஆம் ஆண்டு வரை இயக்குநர் ஜீன் டெயிட்ஜ் தான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ‘பாப்பாய் தி செய்லர்’ கார்ட்டூன் சீரிஸில் வரும் ஹீரோ கதாபாத்திரமான ‘பாப்பாய்’ குழந்தைகள் மத்தியில் மிகவும் பாப்புலரான கேரக்டர்.

இதையும் பாருங்க : Lockdown : தந்தைக்கு முடிவெட்டும் மகள். இயக்குனர் பேரரசுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்காரா?

-விளம்பரம்-

பாப்பாயின் ஸ்டைல் மற்றும் அவர் ஸ்பினச் சாப்பிட்டு வில்லனை அடித்து துவம்சம் செய்யும் காட்சிகள் தான் இதில் சிறப்பாக இருக்கும். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் வரும் பின்னணி இசை மற்றும் ‘பாப்பாயி’-க்கான ஸ்பெஷல் பாடல் தான் ரொம்பவும் ஸ்பெஷல். ‘டாம் & ஜெர்ரி, பாப்பாய்’ மட்டுமின்றி பல கார்ட்டூன் தொடர்களை இயக்குநர் ஜீன் டெயிட்ஜ் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement