இந்த வருடத்தின் டாப் 10 ஃப்ளாப் படங்கள் ! விஜய், அஜித் படங்கள் எத்தனை ?

0
6502
tamil movies
- Advertisement -

10.இணையதளம்:
inaiyathalam பிக் பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமன் நடித்தபடம் இது. மே மாதம் 19 ஆம் தேதி வெளிவந்த இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்வேதா மேனன், ஈரோடு மகேஷ், சுகன்யா மற்றும் டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்து வந்தது. இந்த படத்தினை சங்கர்-சுரேஷ் என இரு புது முக இயக்குனர்கள் இயக்கி இருந்தனர். படம் எதிர்பார்த்த அளவிற்குக் கூட போகவில்லை.

-விளம்பரம்-

9.ரம்:
Rum இந்த வருட துவக்கத்தில் வந்த இந்த படத்தில் நரேன், சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், விவேக் என பலரும் நடித்திருந்தனர். படத்தினை சாய் பரத் இயக்கி இருந்தார். மேலும், படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தும் படம் தோல்வி அடைந்துவிட்டது. வழக்கமான த்ரில்லர் படம் போல் எடுத்திருந்தாலும் படம் சரியாக போகவில்லை

- Advertisement -

8.சங்கிலி புங்கிலி கதவ தொற:
sanguli munguli ஜீவா நடித்த இந்த படமும் அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை. கடந்த பல வருடங்களாக பெரிதாக தன்னுடைய எந்த ஒரு படமும் ஓடாமால் இருந்தாலும், சலைக்க்காமல் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் ஜீவா, சூரி, ஶ்ரீ திவ்யா, ராதிகா சரத் குமார், ராதா ரவி, மொட்ட ராஜேந்திரன், தம்பி ராமைய்யா, மயில்சாமி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தாலும் படம் படு தோல்வி அடைந்தது.

7.பாம்பு சட்டை:
paambu sattai பாபி சிம்ஹா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து வந்த இந்த படத்தை ஆதம் தேசன் இயக்கி இருந்தார். ஒரளவிற்கு எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் அந்த எதிர்பார்ப்பைக் கூட பூர்த்தி செய்யாமல் தோல்வி அடைந்தது.

-விளம்பரம்-

6.கட்டப்பாவ காணோம்:
kattappaava kaanom திடீரென இரண்டு படங்களில் எதிர் பார்ப்பை ஏற்ப்படுத்திய சிபிராஜ். இந்த படத்தில் ஏமாற்றி விடடார். படத்தில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தாலும் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

5.சிவலிங்கா:

sivalinga பழம்பெரும் இயக்குனர் பி.வாசு இயக்கிய இந்த படமும் வழக்கமான லாரன்ஸின் பேய் பட பாணியில் வெளிவர, இதனை பார்த்து பார்த்து பார்த்து அழுத்துப் போன தமிழ் ரசிகர்கள் படத்திற்க்கான போதிய வரவேற்பு கொடுக்கவில்லை.

4.மொட்ட சிவா கெட்ட சிவா:
motta siva ketta siva இந்த வருடத்தில் ராகவா லாரன்சின் இரண்டாவது ஃப்ளாப் படம் இது. மார்ச மாதம் வெளிவந்த இந்த படத்தினை சாய் ரமனி இயக்க ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருந்தார். இருந்தும் படம் வழக்கமான மாசலா அரைத்ததால் ஃப்ளாப் ஆனது.

3.ப்ரூஸ் லீ:
bruce lee அடுத்தடுத்து தன் மார்கெட் அளவிற்கு ஹிட் கொடுத்து வந்த ஜீ.வி பிரகாஷ் இந்த படத்தில் சோடை போகவில்லை. இந்த படம் இவரது முந்தைய படங்களைப் போலவே காமெடி கலந்து கலாட்டா படமாக இருந்தாலும், எதிர்பார்த்த அள்விற்கு ஓடவில்லை

2.முத்துராமலிங்கம்:
muthuraamalingam படத்தின் பெயருக்கு ஏற்ப கதையம்சத்துடன் வந்தாலும், சில லாஜிக் இல்லாத காட்சிகளால் சமூக வலை தளத்தில் வைத்தே படம் ஃப்ளாப் ஆனது குறிப்பிடத்தக்கது. கௌதம் கார்த்திக் அவரது அப்பா நவரச நாயகன் கார்த்திக் பிரியா ஆனந்த் என பல நடித்திருந்தாலும், படம் பல பில்ட் அப்பிற்குப் பிறகு ப்ளாப் தான் ஆனது.

1.காற்று வெளியிடை:
kaatru veliyidai இயக்குனர் மணி ரத்னம் என்றாலே ஒரு காவியப்படைப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. கார்த்திக், மணிரத்தனத்துடன் கூட்டணி என்றதும் சற்று ஏறிய ஹைப், படம் வெளியான முதல் நாளிலேயே தவிடு பொடியாகும் அளவிற்கு படம் ஏமாற்றத்தை அளித்தது.

Advertisement