தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகள் ! முதல் இடத்தில் யார் ?

0
2489

10. ஸ்ரீதிவ்யா

சிவா காரர்த்துக்கேயனுடன் பெரும்பாலும் நடித்து தந்து மார்க்கெட்டை நன்றாக செட் செத்து வருபவர் ஸ்ரீதிவ்யா. இவர் சாதாரணமாக ஒரு படத்தில் நடிக்க ₹ 30 லட்சம் சம்பளமாக வாங்குகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை, மருது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதிவ்யா. தற்போதும் தன் கையில் பல படங்ளை வைத்துள்ளார், அதர்வாவுடன் தமிழில் ஒத்தைக்கு ஒத்தை மற்றும் தெலுங்கில் சில படங்களிலும் நடித்து வருகிறார் ஸ்ரீதிவ்யா.

9.அமலா பால்

மைனா படத்தில் நடித்து உடனடியாக அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர் அமலா பால். அதன் பின்னனர் தெய்வதிருமகள், வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தினார். தற்போது அவர் நடித்துள்ள திருட்டு பயலே – 2 வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. இவர் ஒரு படத்தில் நடிக்க *₹ 40 முதல் ₹ 50 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறார்.

8. ஹன்சிகா மோத்வானி

தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் ஹன்சிகா ஒரு படத்தில் நடிக்க கிட்டதட்ட ₹ 70 லட்சம் சம்பளமாக வாங்குகிறார். மனிதன், மான் கராத்தே, வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார் ஹன்சிகா.

7 காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடிதுள்ள காஜல் அகர்வால் தமிழில் விஜயுடன் துப்பாக்கி மற்றும் மெர்சல் அஜித்துடன் விவேகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ஒரு படத்தில் நடிக்க ₹ 75 லட்சம் முதல் ₹ 1 கோடி வரை பெறுகிறார்.

6. சமந்தா

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் முன்னனி நடிகர்களுடன் கலக்கிய இந்த அழகு தேவதை தற்போது தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் திருமணம் செய்தார். தமிழ், தெலுங்கு மொழிகளில் கலக்கிய சமந்தா விஜயுடன் இரண்டு படங்கள் நடித்துள்ளார். இதனால் நல்ல மார்க்கெட் வைத்துள்ள சமந்தா எந்த மொழிப்படத்தில் நடித்தாலும் கிட்டத்தட்ட ₹ 80 லட்சம் முதல் ₹ 1 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார்.

5தமன்னா

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரு கலக்கு கலக்கியவர் தமன்னா. பாகுபலி முதல் பாகத்தில் செம்மையாக நடித்து அனைவரது பார்வையும் தன் பக்கம் திருப்பியவர். ஒரு படத்தில் நடிக்க தம்மன்ன குறைந்தது ஒரு கோடியாவது பெறுகிறார். சிறுத்தை, ஆனந்த தாண்டவம், தோழா, ஹேப்பி டேஸ், தோழா அஜித்தின் வீரம் என பல படங்களில் நடிரத்துள்ளார். வீரம் படத்திற்கு பிறகு இவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடிவதில்லை.

4ஸ்ருதி ஹாசன்

உலக நாயகன் மகள் என்றால் சும்மாவா? இவர் அனைத்து இந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். 7ஆம் அறிவு, வெல்கம் பேக் என பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்தில் நடிக்க ₹ 1.5 கோடி சம்பளமாக பெறுகிறார்.

3.த்ரிஷா கிருஷ்ணன்

15 வருடங்களுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் நீடித்து வருபவவர த்ரிஷா கிருஷ்ணன். கில்லி படத்தில் ஆரம்பித்து அடுதடுத்து பல ஹிட் படத்தில் நடித்திவிட்டார் த்ரிஷா. இவர் ஒரு படத்தில் நடிக்க ₹ 1 முதல் ₹ 1.5 கோடி வரை பெறுகிறார்.

2.அனுஷ்கா ஷெட்டி

பாகுபலியின் நாயகியான இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். அஜித்துடன் என்னை அறிந்தால் மற்றும் விஜயுடன் வேட்டைக்காரன் படத்தில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்தில் நடிக்க ₹ 1.5 கோடி முதல் ₹ 1.75 கோடி வரை பெறுகிறார்.

1 நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. சிம்புடன் ஏற்பட்ட காதல் தோல்வி மற்றும் பிரவுதே வாவுடனா காதல் தோல்வி என அடுத்தடுத்து வாழ்க்கையில் பெரும் பிரச்னைகளை சந்தித்ததால் திறமையான இவர் திரையுலகில் நிற்கமாட்டார் என நினைத்த பலருக்கு மீண்டு வந்து பதிலடி கொடுத்தார். தற்போது வெளியாகியுள்ள அறம் இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு படத்தில் நடிக்க ₹ 2 முதல் ₹ 2.5 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் லேடி சூப்பர் ஸ்டார்.