இன்ஸ்டாகிராம் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தென்னிந்திய நடிகைகளின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவின் பயன்பாடு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் புதுப்புது செயலிகளை உருவாக்கி வருகிறார்கள். குறிப்பாக இன்ஸ்டாகிராம் போன்ற செயலியை சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் என பலர் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்ஸ்டாகிராம் மூலம் அதிக அளவில் சம்பாதிக்கும் தென்னிந்திய நடிகைகள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஷ்மிகா மந்தனா:
தென்னிந்திய சினிமா உலகில் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ராஷ்மிகா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி பல மொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடித்த அனிமல் படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றிருந்தாலும் நல்ல வசூலை செய்திருந்தது. மேலும், இவரை இன்ஸ்டாவில் 43.3 மில்லியன் மக்கள் ஃபாலோ செய்கிறார்கள்.
சமந்தா:
தென்னிந்திய சினிமாவில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் சமந்தா. இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. விவாகரத்திற்கு பிறகு சமந்தா தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இருந்தாலுமே இவருக்கு உடல்நிலை சரியாக ஒத்துழைக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் தசை அலர்ஜி நோயால் ரொம்பவே அவஸ்தை பட்டு இருந்தார். சமீபத்தில் தான் இவர் பூரணமாக குணமடைந்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவர் இன்ஸ்டாகிராமில் 35.3 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.
காஜல் அகர்வால்:
தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் இருந்தவர் காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. திருமணத்திற்குப் பிறகும் இவர் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இருந்தாலும் இவருடைய படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறவில்லை. தற்போது இவர் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும், இவரை இன்ஸ்டாகிராமில் 27.1 மில்லியன் மக்கள் பாலோ செய்கிறார்கள்.
பூஜா ஹெக்டே:
தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார். தற்போது இவர் பாலிவுட்டிலும் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். மேலும், இவரை இன்ஸ்டாகிராம் 27 மில்லியன் மக்கள் ஃபாலோ செய்கிறார்கள்.
ஸ்ருதிஹாசன்:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து இருந்தவர் ஸ்ருதி ஹாசன். இவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘7 ஆம் படத்தின் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், அதற்கு முன்பு இவர் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த சலார் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை அடுத்து இவர் தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். தமிழில் தான் இவருக்கு சரியாக பட வாய்ப்புகள் அமையவில்லை. மேலும், இவருக்கு இன்ஸ்டாகிராமில் 24.8 மில்லியன் பாலோவர்ஸ் இருக்கின்றார்கள்.
நயன்தாரா:
நம்பர் ஒன் இடத்தில் நயன்தாரா தான் இருக்கிறார். தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகை ஆகவும், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும், பல ஆண்டுகாலமாக லேடி சூப்பர் ஸ்டார் ஆகவும் நயன்தாரா கலக்கி கொண்டிருக்கிறார். இவர் முன்னணி நடிகை மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். சமீபகாலமாக இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும், இவரை இன்ஸ்டாவில் 8.4 மில்லியன் மக்கள் ஃபாலோ செய்கிறார்கள். சமீபத்தில் தான் இவர் இன்ஸ்டா பக்கத்தை தொடங்கினார்.
திரிஷா:
இரண்டாம் இடத்தை திரிஷா பிடித்து இருக்கிறார். தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் திரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்தாலும் பின் கமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
மேலும், இவரை இன்ஸ்டாவில் 6.8 மில்லியன் மக்கள் ஃபாலோ செய்கிறார்கள். இவர் சோசியல் மீடியாவில் பெரிதாக புகைப்படம் வீடியோக்களை பதிவிடவில்லை என்றாலும் ரசிகர்கள் இவரை பாலோ செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.