பிரதமர் அலுவலகம் வரை பறந்த புகார், TTF கடைக்கும் வந்த சிக்கல். போக்குவரத்து துறை அனுப்பிய நோட்டீஸ்

0
485
- Advertisement -

டி டி எஃப் வாசன் கடைக்கு போக்குவரத்து போலீஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நபராக திகழ்பவர் டிடிஎஃப் வாசன். இவர் தன்னுடைய உயரக பைக்கில் வேகமாக செல்வது, அப்படி செல்லும் வழியில் ஏழைகளுக்கு பணம் மற்றும் சாப்பாடு தொடர்பாக உதவி செய்வது என்று வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். இதனால் இவர் சீக்கிரமாகவே 2k கிட்ஸ்களின் மத்தியில் பிரபலமான நபராக இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் நபர்களில் டிடிஎஃப் வாசனும் ஒருவர். இப்படி இவர் பிரபலமாக இருந்தாலும் வண்டியில் அதி வேகமாக சென்று பிறரை பயமுறுத்துவது, சாலை விதிகளை மீறி கூட்டத்திற்குள் செல்வது என்று வேலைகளை செய்து சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். இவர் இளைஞர்களுக்கு முன் உதாரணமாக மட்டுமில்லாமல் இப்படி இவர் செய்வதன் மூலம் பல இளைஞர்கள் தவறான பாதையில் செல்வார்கள் என்றெல்லாம் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றார்கள்.

- Advertisement -

டிடிஎஃப் வாசன் குறித்த தகவல்:

இப்படி இவர் குறித்து பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் இருந்தாலும் தற்போது இவர் சினிமாவில் நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாக இருக்கிறார். இந்தப் படத்தை செல் அம் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் கூல் சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பின் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றது.

டிடிஎஃப் வாசனுக்கு ஏற்பட்ட விபத்து:

இப்படி இருக்கும் நிலையில் தான் கடந்த ஆண்டு சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் டிடிஎப் வாசன் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு காரை முந்தி செல்ல முயன்ற போது தான் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இவருக்கு பயங்கரமாக அடிபட்டு கை கால்களில் முறிவு ஏற்பட்டது. மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

டிடிஎஃப் வாசன் கைது:

அதோடு போக்குவரத்து துறை டிடிஎப் வாசன் லைசென்ஸை 10 வருடத்திற்கு ரத்து செய்திருக்கிறது. மேலும், மருத்துவ சிகிச்சைக்கு பிறகு டிடிஎஃப் வாசன் ஜெயிலுக்கு சென்றார். பின் அவர் ஜாமினில் வெளியே வந்தார். இப்படி இருக்கும் நிலையில் டி டி எஃப் வாசன் கடைக்கு போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பிய தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

டிடிஎஃப் வாசன் மீது புகார்:

அதாவது டி டி எஃப் வாசன் அவர்கள் தன்னுடைய இருசக்கர வாகன கடையில் அதிக சத்தம் வரக்கூடிய சைலன்ஸர்களை விற்பனை செய்து வருகிறார். இது தொடர்பாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனை அடுத்து இந்த புகார் பிரதமர் அலுவலகத்திற்கு சென்றிருக்கிறது. அதன் அடிப்படையில் டிடிஎப் வாசன் கடை மீது போலீசார் சோதனை நடத்தி இருக்கிறார்கள். போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை எல்லாமே அப்புறப்படுத்தி இருக்கிறார்கள்.
இதை எடுத்து வாசன் மீது போலீசார் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

Advertisement