தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் 1 நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 2006 ஆம் ஆண்டு நடிகை திரிஷா அவர்கள் ‘உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்’ என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இந்நிலையில் தற்போது நடிகை திரிஷா அவர்கள் ஒரு புது படத்தில் ஜெயம் ரவிக்கு அக்காவாக நடித்து வருகிறார். இதனை அறிந்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.
வரலாற்று சிறப்புமிக்க ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக எடுக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர். அவ்வளவு ஏன் வரலாற்று கதைகளை எடுக்கும் கெட்டிக்காரரான மணிரத்னம் கூட ‘பொன்னியின் செல்வன்’ படத்தை எடுக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்கிறார். அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். சோழ மன்னர்களின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது தான் கல்கி. ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்களால் படம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.
இதையும் பாருங்க : தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல இளம் சீரியல் நடிகை. காரணம் இது தானாம்.
தற்போது நீண்ட நாள் கனவான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இப்போது மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா , அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து படத்தை இயக்குகிறார் மணிரத்தனம். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் ‘ஷாம் கவுஷல்’ ஸ்டண்ட் மாஸ்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகர்கள் எல்லோரும் தலைமுடியை வளர்க்கவும், வாள் சண்டை, குதிரை ஏற்றம் போன்ற பழைய கலைகளை கற்றுக் கொள்ளவும் பயிற்சிகள் எடுத்துக் கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை திரிஷா அவர்கள் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
தற்போது உள்ள செய்திகளின் படி இந்த படத்தில் நடிகை திரிஷா அவர்கள் குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ராஜராஜ சோழன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து வருகிறார். ராஜராஜ சோழனின் அக்காத் தான் குந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே நடிகர் ஜெயம்ரவிக்கு அக்கா வேடத்தில் தான் நடிகர் திரிஷா நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. குந்தவை கதாபாத்திரம் தான் இந்த படத்தில் ஹீரோ வந்தியத்தேவனுக்கு ஜோடி. ஆக இந்த படத்தின் நாயகியே த்ரிஷா தான் என்று சொல்லப்படுகிறது.