அனிமல் படம் பற்றி ஒரே வார்த்தையில் புகழ்ந்து திரிஷா போட்ட பதிவு – கழுவி ஊற்றிய ரசிகர்கள். பதிவை நீக்கிய திரிஷா.

0
435
- Advertisement -

அனிமல் படம் குறித்து நடிகை திரிஷா பதிவிட்டு இருக்கும் பதிவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வரும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் அனிமல் படம் குறித்த செய்தி தான் அதிகமாக உலா வருகிறது. ராஷ்மிகா மந்தனா-ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் அனிமல். இவர்களுடன் இந்த படத்தில் அனில் கபூர், பாபி தியோல் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்தப் படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி இருக்கிறார். மேலும், டி சீரீஸ் ஃபிலிம்ஸ், பத்ரகாலி பிக்சர்ஸ் மற்றும் இனி ஒன் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. பல எதிர்பார்ப்புகள் மத்தியில் இன்று இந்த படம் வெளியாகி இருக்கிறது. படத்தில் தன்னுடைய தந்தை மீது மகன் ஒருவன் அதிக பாசம் வைத்திருக்கிறார். இவர் தன்னுடைய தந்தையின் அன்பிற்காக எந்த எல்லைக்கும் செல்வதே படத்தின் கதை.

- Advertisement -

அனிமல் படம்:

இதில் மகனாக ரன்பீர் கபூர் நடித்திருக்கிறார். அவருடைய தந்தையாக அணில் கபூர் நடித்திருக்கிறார். ரன்பீர் கபூர் சிறுவயதிலிருந்தே இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபராக அணில் கபூர் இருக்கிறார். இவர் தன்னுடைய மகனை எதற்கெடுத்தாலும் பயங்கரமாக திட்டுகிறார். ஆனால், தன்னுடைய தந்தை எவ்வளவு காயப்படுத்தினாலும் அவர் மீது அதிக அன்பை கொட்டுகிறார் ரன்பீர் கபூர். தந்தை மகனுக்கு இடையே இருக்கும் உறவை மையமாக வைத்து கேங்ஸ்டர் படமாக இயக்குனர் கொடுத்திருக்கிறார்.

படம் குறித்த தகவல்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. கதைக்களமும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சுவாரசியமாக இல்லை என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் படம் முழுக்க ஆண் சிந்தனை இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு படத்தில் ராஸ்மிகா மந்தனா பயங்கர கிளாமராக நடித்து இருக்கிறார். மேலும், இந்த படம் இந்தியில் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழி ஐந்து மொழிகளில் வெளியாகியிருக்கிறது.

-விளம்பரம்-

திரிஷா பதிவு:

இந்த படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் வெளியாகி மூன்று நாட்களிலேயே இந்திய அளவில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படம் தொடர்பாக பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்த படத்தை பார்த்து பிரபல நடிகை திரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

நெட்டிசன்கள் விமர்சனம்:

அதில் அவர், அனிமல் படம் ஒரு cult திரைப்படம், இதை இயக்குனர் நேர்த்தியாக கொடுத்து இருக்கிறார் என்று பாராட்டி இருக்கிறார். இதை பார்த்து நெட்டிஷன்கள் பலரும் திரிஷாவை விமர்சித்து வருகிறார்கள். காரணம், கடந்த சில வாரங்களாகவே மன்சூர் அலிகான் -திரிஷா இடையே பயங்கர சர்ச்சை நிலவிக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. அப்போது திரிஷா, பெண்களின் கண்ணியம் பற்றி பேசிவிட்டு தற்போது அனிமல் படத்தை பாராட்டி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது என்று ட்ரோல் செய்து வருகிறார்கள். இதை அடுத்து திரிஷா தான் போட்ட பதிவை நீக்கி இருக்கிறார்.

Advertisement