தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி திரைப் படங்களில் நடித்து உள்ளார். சமீபத்தில் நடிகை திரிஷா அவர்கள் தமிழில் “96 “படத்திலும் , மலையாளத்தில் ‘ஹே ஜூடு’ என்ற படத்திலும் நடித்து இருந்தார். இந்த இரண்டு படத்திற்காக நடிகை திரிஷாவுக்கு பல விருதுகள் கிடைத்து உள்ளது. இந்த இரண்டு படங்களுமே ப்ளாக்பஸ்டர் அளவிற்கு சூப்பர் ஹிட் கொடுத்தது என்று சொல்லலாம். சமீபகாலமாகவே நடிகை திரிஷா அவர்கள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சில ஆண்டுகளாகவே திரிஷாவின் நடிப்பில் வெளிவந்த ஒரு சில படங்கள் தோல்வி அடைந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு இயக்குனர் ஷாம் பிரசாந்த் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் திரிஷா நடித்து உள்ள படம் “ஹே ஜூடு”. இது மலையாள படம் ஆகும். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அப்பாவி ஹீரோவிற்கு அவனுடைய கனவை தேடிச் செல்ல உதவி செய்யும் ஹீரோயினி கதாபாத்திரத்தில் திரிஷா நடித்து உள்ளார். தற்போது இந்த படத்திற்காக நடிகை திரிஷா அவர்கள் மூன்று அவார்டுகளை வாங்கி உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வேற லெவல் ரசிகர்கள் கவர்ந்தது. அதே ஆண்டு தமிழில் இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் “96” என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிகை திரிஷா நடித்து உள்ளார். இந்த படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரித்து உள்ளார்.
இதையும் பாருங்க : 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்த DNA கூட்டணி. குஷியில் ரசிகர்கள்.
முதன் முறையாக நடிகை திரிஷா அவர்கள் விஜய் சேதுபதியுடன் நடித்த படம் இது தான். இந்த படம் முழுக்க முழுக்க காதல் காவியம் கண்ணோட்டத்தில் இருந்தது. மேலும், இந்த படம் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் வரும் ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காமல் சூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. அதிலும் “காதலே காதலே” என்ற பாடலை பற்றி சொல்லவே வார்த்தை இல்லை அந்த அளவிற்கு மாஸ். இந்த படத்தை பார்க்கும் போது நம்மையே மீண்டும் பள்ளி பருவத்திற்கு அழைத்து செல்வது போன்று உள்ளது என்று கூறுகிறார்கள் ரசிகர்கள். அந்த அளவிற்கு படம் வெறித்தனம்.
அதுமட்டும் இல்லாமல் சில தினங்களுக்கு முன்பு பிலிம் பேர் விருது வழங்கினார்கள். அதில் 96படம் நிறைய பிரிவில் விருதுகளை வாங்கியது. இதில் சிறந்த நடிகைக்கான விருதும் திரிஷா அவர்கள் வாங்கினார். மேலும், “96” படத்திற்காக பதினோரு விருதுகளையும், “ஹே ஜூடு” என்ற படத்துக்காக மூன்று விருதுகளையும் மொத்தம் இந்த ஆண்டு மட்டும் 14 விருதுகளை வாங்கி உள்ளார் நடிகை திரிஷா. தற்போது அவர் தன்னுடைய “96”, “ஹே ஜூடு” படத்திற்காக வாங்கிய அவார்டுகளை மேஜை மீது வைத்து போட்டோ எடுத்து உள்ளார். அதோடு அந்த புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. மேலும், இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நடிகை திரிஷாவிற்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அம்மணிக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் மீண்டும் குவிக்கின்றன