நடிகை திரிஷா ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மேலும் தமிழ், தெலுகு, மலையாளம் என்று எல்லா மொழி படங்களிலும் பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டார்.இளம் நடிகையாக இருந்த போது பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த திரிஷாவிற்கு தற்போது 35 வயதாகி விட்டது.
மேலும் கடந்த சில ஆண்டுகளாக முன்னை போன்றேல்லாம் படங்களில் நடிக்க அதிக வாய்ப்பும் இல்லாமல் இருந்தது. ஆனால் சென்ற ஆண்டு “ஹே ஜூட்” என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மாபெரும் வெற்றியடைய திரிஷாவிற்கு மீண்டும் பட வாய்ப்புகள் வர தொடங்கியள்ளது.
இதையும் பாருங்க : குடும்ப குத்து விளக்காய் இருந்த வாணி போஜன்.! எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்க.!
அதன் பின்னர் விஜய் சேதுபதியுடன் 96 படத்திலும், சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பேட்ட படத்திலும் நடித்து இழந்த தனது மார்கெட்டை மீண்டும் தன்வசம் ஆக்கினார் திரிஷா. அப்போதும் சமூக வலைதளத்தில் தனது புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார் திரிஷா.
அந்த வகையில் சமீபத்தில் கடற்கரையில் இருக்கும் ஒரு புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், அந்த புகைப்படத்தில் தான் மேக்கப் எதுவும் போடவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார் திரிஷா. மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகாக இருக்கிறீர்களே என்று ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி வீசி வருகின்றனர்.