டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10ல் இருக்கும் சீரியல்கள் – இந்த வாரம் சன் டிவி, விஜய் டிவியை முந்திய ஜீ தமிழ் சீரியல்.

0
393
- Advertisement -

தமிழ் சீரியலில் இந்த ஆண்டின் 13 வது வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக சின்னத்திரை சீரியல்கள் குறித்த செய்திகள் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதிலும் தமிழ் டிவி சேனல்களில் புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக சீரியல்கள் எல்லாம் மக்களை கவர்ந்து வைத்துள்ளது.

-விளம்பரம்-
SuntvSerials

வாரத்தின் முதல் நாள் திங்கள் தொடங்கி சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் முதல் இரவு தூங்கும் வரை சீரியல்கள் வரிசைகட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. மேலும், பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி மற்றும் விஜய் சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. அதோடு டிஆர்பி ரேட்டிங்கில் கூட இந்த சேனல்களின் சீரியல்கள் தான் மாற்றி மாற்றி இடம் பிடிக்கிறது. அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டின் 13வது வாரத்தில் டாப் 10 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது.

- Advertisement -

சிங்க பெண்ணே சீரியல்:

சிங்க பெண்ணே சீரியல் 10.15 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது. குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ்சில் வேலைக்கு சேர்கிறார் ஆனந்தி. இவருடன் சில பேர் வேலை செய்கிறார்கள். அங்கு அவர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து தான் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது சீரியலில் ஆனந்தி, அன்புவை காதலிப்பாரா? குடும்ப சூழ்நிலைக்காக காதலை மறுப்பாரா? போன்ற பரபரப்பான கட்டங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

கயல்:

முதல் இடத்தில் இருந்த கயல் சீரியல் எதிர்பார்க்காத வகையில் சில வாரங்களாகவே இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த தொடர் 9.68 புள்ளிகளை பெற்று இருக்கிறது. இந்த தொடர் 2021 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சைத்ரா ரெட்டி கதாநாயகியாகவும், கதாநாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார்கள். தன் குடும்பத்திற்காக எல்லா சந்தோசம் எல்லாத்தையும் இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதை தான் கயல் சீரியல்.

-விளம்பரம்-

எதிர்நீச்சல்:

கடந்த வாரம் இரண்டாம் இடத்தில் இருந்த இந்த எதிர்நீச்சல் சீரியல் இந்த வாரம் 8.74 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்து இருக்கிறது. இயக்குனர் திருச்செல்வம் தான் நீண்ட இடைவெளிக்கு பிறகு எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருகிறார். பெண்கள் உரிமைக்காக போராடும் இந்த தொடர் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் மத்தியில் அதிக அளவு ஆதரவு பெற்று வருகிறது. தற்போது சீரியலில் தர்ஷினி திருமணம் குறித்த ட்ராக் தான் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

வானத்தைப்போல:

வானத்தைப்போல சீரியல் 8.09 என்ற புள்ளிகளை பெற்று நான்காம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது முழுக்க முழுக்க அண்ணன்- தங்கை பாச கதை. இந்த தொடரில் ஸ்ரீகுமார், மான்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். பொன்னி-துளசி இடையே ஏற்படும் சண்டை வைத்து தான் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

சிறடிக்க ஆசை:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் இதற்கு முன் ஆறாம் இடத்தை பிடித்து இந்த வாரம் 7.91 புள்ளிகளை பெற்று ஐந்தாம் இடத்தை பிடித்து இருக்கிறது. ஆனால், விஜய் டிவியில் இந்த சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருக்கிறது. சீரியலில் ஸ்ருதி அப்பா-முத்துவுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் ஸ்ருதி-ரவி வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார்கள். அவர்களை வர வைக்க முத்து-மீனா இருவரும் சமாதானம் செய்கிறார்கள். அடுத்து என்ன என்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

இனியா:

யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த வாரம் நான்காம் இடத்தில் இருந்த இனியா சீரியல் இந்த வாரம் 7.80 புள்ளிகளை பெற்று ஆறாம் இடத்தை பிடித்து இருக்கிறது. இந்த தொடரில் ஆலியா மானசா, ரிஷி உட்பட பலர் நடித்து வருகிறார்கள். இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இனியா ஜெயிலில் இருப்பதால் அவரை வெளியே எடுக்க விக்ரம் போராடி கொண்டு இருக்கிறார்.

சுந்தரி 2 சீரியல்:

சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் சுந்தரி. இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நன்றாக செல்கிறது. இந்த சீரியலின் முதல் பாகத்தை முடித்துவிட்டு தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சுந்தரி கலெக்டராக இருக்கிறார். மேலும், இந்த இரண்டாம் பாகத்தில் தெய்வமகள் சீரியல் நடிகர் கிருஷ்ணா நடிக்கிறார். இந்த தொடர் 7.72 புள்ளிகளை பெற்று ஏழாம் இடத்தை பிடித்து இருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியல்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் 6.91 புள்ளிகளை பெற்று எட்டாவது இடத்தை பிடித்து இருக்கிறது. இந்த சீரியல் குடும்ப பெண்களின் போராட்ட கதை. பாக்கியா ரெஸ்டாரண்டை காலி செய்ய கோபி பல திட்டங்கள் தீட்டுகிறார் . இதை பாக்கியா முறியடிப்பாரா? என்று சுவாரசியமாக செல்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் 5.86 புள்ளிகளை பெற்று 9வது இடத்தை பிடித்து இருக்கிறது

பல மாதங்களுக்கு பின் 10வது இடத்தை ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியல் பிடித்து இருக்கிறது.

Advertisement