மதங்களை கடந்து விரும்பப்பட்ட பாடகர் அனிபா. சினிமாவில் அவர் பாடிய பாடல்கள் என்னென்னெ தெரியுமா?

0
220
- Advertisement -

அரசியல் தொடங்கிய காலத்தில் தமிழகத்தில் உருவாக்கப்பட்ட கட்சிகளில் ஒன்று திமுக. இந்த கட்சி மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்கு காரணம் அண்ணா, கருணாநிதி போன்றவர்களுடைய பேச்சுகள் தான். அவர்களுடைய கருத்துக்கள் இன்றும் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி தான் வருகிறது. அதேபோல் மக்களை ஒன்று திரட்ட போராடி இருந்தவர்களில் ஒருவர் நாகூர் ஹனிபா. இவரின் உண்மையான பெயர் இஸ்மாயில் முகம்மது ஹனிபா.

-விளம்பரம்-

இவர் 1925 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே இவர் திராவிட இயக்கங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பின் தன்னுடைய 13 வது வயதில் ராஜாஜி கருப்புக்கொடி காட்டி சிறைக்கு சென்றவர். அதோடு இவர் தன் 11 வயதிலேயே பள்ளிக்கூடத்தில் இஸ்லாமிய பாடல்களை பாடி இருந்தார். தன்னுடைய 15 வயதில் தனியாக கச்சேரியையும் ஆரம்பித்தார். அப்போதே இவருடைய ஒரு கச்சேரிக்கு 25 ரூபாய் வாங்கி இருக்கிறார். அப்போதிலிருந்து இறக்கும் வரை 75 ஆண்டுகளுக்கும் மேலாக பல இடங்களில்
பாடி இருக்கிறார்.

- Advertisement -

ஹனிபா குறித்த தகவல்:

அது மட்டும் இல்லாமல் இவர் 15 ஆயிரம் மேடைகளில் பாடியிருக்கிறார். அதிலும் ‘அண்ணா அழைக்கின்றார்’, ‘ஓடிவருகிறான் உதயசூரியன்’ என்றெல்லாம் தன்னுடைய கம்பீரக் குரலால் ஒலித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர். மேடையிலேயே ஹனிபா பாடினால் ஒலிபெருக்கியே தேவை இல்லை. அந்த அளவிற்கு கனீர் குரல் கொண்டவர். இவருடைய குரலை பாராட்டி பெரியார் ஒரு ரூபாய் பரிசளித்து இருந்தார். திராவிட இயக்கங்களுடைய பல மாறுதல்களை நேரில் பார்த்த சாட்சி அனிபா தான். அதை இவர் தன்னுடைய பாடல் மூலமும் பதிவு செய்து இருக்கிறார்.

அரசியலில் ஹனிபா:

ஈ வெ கி சம்பத் திமுகவில் இருந்து பிரிந்தபோது நாகூர் ஹனிபா ‘வளர்த்த கெடா மார்பில் பாய்ந்ததடா’ என்ற பாடலை எழுதியிருந்தார். அதற்குப் பிறகு எம்ஜிஆர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவை உருவாக்கினார். அப்போது எம்ஜிஆர் தனிக்கட்சியை உருவாக்கி இருந்த போது ஹனிபாவை அழைத்திருந்தார். ஆனால், ஹனிபா எனக்கு ‘ஒரே இறைவன், ஒரே கட்சி’ என்று கூறியிருந்தார். மேலும், இவருக்கு சினிமாவில் நிறைய பாட வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவருடைய சில பாடல்கள் மட்டுமே இடம் பிடித்தது.

-விளம்பரம்-

சினிமாவில் ஹனிபா பாடல்:

முதன்முதலாக இவர் சினிமாவில் பாட வந்த போது இவருடைய பெயரை ஹனிஃபா என்று என்பதற்கு பதிலாக குமார் என்ற பெயரை வைத்தார்கள். ஆனால், அதை ஹனிபா மறுத்துவிட்டார். பின் ரேடியோக்களில் பாடி புகழ் பெற்ற ஹனிபா அகிலந்த வானொலியை ஆகாசவாணி என்று மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரேடியோவில் பாடுவதே நிறுத்திவிட்டார். அந்த அளவிற்கு தன்னுடைய கொள்கைகளில் மாறாதவர். அதிலும் இவர் சினிமாவில் பாடிய ‘எல்லோரும் கொண்டாடுவோம் உன் மதமா என் மதமா’ என்று பாடல் மதங்களை கடந்து எல்லோரும் பிடித்த பாடலாக இருந்தது.

ஹனிபா நினைவு நாள்:

மேலும் கருணாநிதிக்கும் ஹனிபாவுக்கும் சின்ன வயதிலிருந்தே நட்பு இருந்தது. ஹனிபா தான் கட்டிய வீட்டிற்க்கு கருணாநிதி இல்லம் என்று பெயர் வைக்கும் அளவிற்கு இருவருக்கும் இடையே நட்பு இருந்தது. கருணாநிதிக்காக ஹனிபா பாடிய கல்லக்குடி கொண்ட கருணாநிதி என்ற பாடல் இன்றும் திமுக மேடைகளில் தவறாமல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. இவரை எடுத்து மதுரை ஆதினத்திருக்கும் ஹனிபாக்கும் இடையே நட்பு இருந்தது. மேலும் தன்னுடைய கடைசி மேடையில் ஹனிபா ஓடி வருகிறான் உதயசூரியன் என்ற பாடலை பாடி இருந்தார். இந்நிலையில் இன்று அவருடைய நினைவு நாள். இவருடைய நினைவு தினத்தில் திமுகவை சேர்ந்தவர்கள் இரங்கலை தெரிவித்தும் பதிவுகளை போட்டும் வருகிறார்கள்.

Advertisement