விவாகரத்தானவர்களை இரண்டாம் திருமணம் செய்த பிரபலங்கள் – இதுல இமான், ஹன்சிகா தான் ஹைலைட்

0
791
- Advertisement -

சினிமா உலகில் விவாகரத்து செய்து மீண்டும் திருமணம் செய்து கொண்ட பிரபலங்களின் பட்டியல் தான் தற்போது வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் திகழும் பிரபலமான நடிகர், நடிகைகள் விவாகரத்து செய்து கொண்டு மீண்டும் மறுமணம் செய்திருக்கிறார்கள். அந்த வகையில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிரபலங்களில் பட்டியல் தான் தற்போது பார்க்க போகிறோம்.

-விளம்பரம்-

ஆதிக் ரவிச்சந்திரன்- ஐஸ்வர்யா பிரபு::

தமிழில் வெளிவந்த திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் ஆதிக் ரவிச்சந்திரன். இதை அடுத்து இவர் சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்திருந்த மார்க் ஆண்டனி என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இவர் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து வந்திருக்கிறார். ஐஸ்வர்யாவிற்கு ஏற்கனவே பிரபுவின் தங்கை மகன் குணாலை திருமணம் செய்திருந்தார்.

- Advertisement -

ஆனால், திருமணம் ஆகி சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். தற்போது ஐஸ்வர்யா சொந்தமாக பேக்கரி பிசினஸ் செய்து கொண்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன்- ஐஸ்வர்யா இருவரும் காதலித்து வந்ததை இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து கடந்த 15ஆம் தேதி தான் இவர்களுக்கு சென்னையில் சிறப்பாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

ரெடின் கிங்ஸ்லி-சங்கீதா:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரெடின் கிங்ஸ்லி. பெரும்பாலும் இவர் நெல்சன் படங்களில் தவறாமல் நடித்து விடுவார். இவருடைய காமெடியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. இவர் சீரியல் நடிகை சங்கீதாவை சமீபத்தில் தான் திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுடைய திருமணம் சிம்பிளாக தான் நடைபெற்றது. தற்போது ரெடின்க்கு 46 வயது வயதாகும். இதுதான் இவருக்கு முதல் திருமணம். ஆனால், சங்கீதாவிற்கு ஏற்கனவே கிரிஷ் என்பவர் உடன் 2009 ஆம் ஆண்டு திருமணமானது. பின் இருவரும் பிரிந்து விட்டார்கள். சங்கீதாவிற்கு ஷிவ்யா என்ற ஒரு பெண் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

ஜான் கொக்கேன்-பூஜா:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வில்லனாக திகழ்பவர் ஜான் கொக்கேன். இவர் ஏற்கனவே நடிகை மீராவை திருமணம் செய்திருந்தார். பின் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் 2016 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். இதனை அடுத்து நடிகர் ஜான் அவர்கள் படங்களில் துணை நடிகையாகவும், குணசித்திர கதாபாத்திரங்களும் நடிக்கும் நடிகை பூஜாவை 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதேபோல் பூஜாவும் ஏற்கனவே க்ரெக் என்பவரை திருமணம் செய்து 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பூஜா-ஜான் தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

டி இமான்- எமிலி:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இசையமைப்பாளராக திகழ்பவர் இமான். இவ்ருடைய பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. இவர் மோனிகா என்பவரை திருமணம் செய்து இருந்தார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறது. 13 ஆண்டுகளாக இவர்களுடைய திருமண வாழ்க்கை நீடித்தது. அதற்குப் பிறகு 2022 ஆம் ஆண்டு இவர்கள் விவாகத்து செய்து விட்டார்கள். பின் சில மாதங்களிலேயே இமான், எமிலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதேபோல் எமிலிக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹன்சிகா-சோஹைல் கத்தூரியா:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் ஹன்சிகா. இவர் தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான சோஹைல் கத்தூரியாவை கடந்த ஆண்டு தான் திருமணம் செய்து கொண்டார். இவர் அன்சிகாவின் தொழில் பாட்னராகவும் இருக்கிறார். அதோட சோஹைலுக்கு ஏற்கனவே ரிங்கி என்பவருடன் திருமணமாகி விவாகரத்தும் ஆகிவிட்டது. ரிங்கி வேற யாரும் இல்லை ஹன்சிகாவின் தோழி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement