யூடுயூபில் பைக் சாகசங்கள் செய்து 2k கிட்ஸ் மனதில் ஹீரோவாக திகழ்ந்து வரும் TTF வாசன் பைக் விபத்தில் சிக்கிஇருக்கும் விஷயம் தான் கடந்த இரண்டு தினங்களாக பேசுபொருளாகி இருக்கிறது. என்னதான் இவருக்கு 2k கிட்ஸ் ஆதரவு இருந்தாலும் இவர் இளைஞர்களுக்கு ஒரு தவறான உதாரணம் என்று தான் பலர் கூறி வருகின்றனர். இவர் மீது பல முறை சாலை விதி மீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட போதிலும் இவர் அடிக்கடி பொது சாலையில் விதி மீறல்களை செய்து கொண்டு தான் இருக்கிறார்.
Don't encourage these ppl, he is not d person who fought for independence & went 2 jail, he never obeyed d rules & now due to which he met with accident & got arrested.
— thilee_1444 (@v_Thileepan) September 19, 2023
These videos r kind of triggering ppl, that police were mistakenly arrested him.#TTFVasan #TTFvasanAccident https://t.co/wa8ANQiYrc
அந்த வகையில் சமீபத்தில் இவர் தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்து கோர விபத்தில் சிக்கி இருந்தார். இந்த விபத்தில் அவருக்கு அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து ttf வாசன் ரசிகர்கள் சிலர் TTF வாசன் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதே சமயம் பெரும்பாலான மக்கள் பலர் இது போன்று போது சாலையில் ஆபத்தான ஸ்டண்ட் செய்யும் இவரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட வேணும் என்றும் இவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் TTF வாசன் மீது பாலுச்செட்டி சத்திரம் காவல் துறையினர் 279 IPC மனித உயிருக்கு ஆபத்து உண்டாகும் வகையில் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்படும் விதத்தில், ஒரு வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுவது, 308 IPC பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் முறையில் அசட்டுத் துணிச்சலுடன் வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட வேண்டும் என்றும் காவல் துறை பரிந்துரை செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் சென்னையில் உள்ள நண்பர் அபீஸ் என்பவரின் வீட்டில் பதுங்கி இருந்த யூடியூபர் டிடிஎஃப் வாசன் நேற்று விடியற்காலையில் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு அழைத்துவரப்பட்டார். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ttf கைது செய்யப்பட்டதும் வீடியோ வெளியிட்ட அவரின் நண்பர் அஜீஸ், ttfற்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் அதற்குள் அவரை கைது செய்துவிட்டார்கள் என்று கூறி இருந்தார். இது ஒருபுறம் இருக்க புழல் சிறையயில் அடைக்கப்பட்ட TTF வாசன் இன்று முதுகுவலி காரணமாக ஸ்டான்லி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார்.
TTF Vasan & Ajeesh Mapla Uruttugal😂pic.twitter.com/QVWD0pXzf7
— Saloon Kada Shanmugam (@saloon_kada) September 20, 2023
அங்கே அவரை வீடியோ எடுத்த போது சிரித்தபடி ஜாலியாக அமர்ந்து போஸ் கொடுத்து இருக்கிறார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது ttf வாசன் எலும்பு முறிவு முதல் தற்போது முதுகு வலி வரை அனைத்தும் நாடகமா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் விபத்துக்கு பின் TTF வாசன் முதன் முறையாக வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், அந்த வீடியோவில் பேசிய அஜீஸ் ‘ttf வாசன் என்ன தவறு செய்தான் ஏன் தப்பு தப்பா அவனை பற்றி வீடியோ போடுறீங்க என்று ஆவேசமாக பேசி இருக்கிறார். மேலும், ttf செய்த தர்மம் தான் அவனை காப்பாற்றி இருப்பதாகவும் கூறியுள்ளார்.