விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்த தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இவர் முதலில் தமிழ் சினிமாவில் சுக்ரன் படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
பின் 2012-ஆம் ஆண்டு வெளி வந்த நான் படத்தின் மூலம் ஹீரோவாக தன் திரை பயணத்தை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து இவர் சலீம், இந்தியா பாகிஸ்தான், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன், பிச்சைக்காரன் என பல படங்களில் நடித்து இருக்கிறார். பெரும்பாலும் இவர் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது இவர் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார்.
விஜய் ஆண்டனி குடும்பம்;
இதனிடையே கடந்த 2006ஆம் ஆண்டு பாத்திமா என்பவரை விஜய் ஆண்டனி திருமணம் செய்து கொண்டார். இவர் ஹீரோவாக நடித்த நான் என்ற படத்தை தயாரித்தது அவரது மனைவி பாத்திமா தான். இவரது மனைவி பாத்திமா டீவி தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். பின்னர் விஜய் ஆண்டனியை பேட்டி எடுக்க சென்ற போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
விஜய் ஆண்டனி மகள் தற்கொலை:
அதில் விஜய் ஆண்டனியின் 16 வயது மகள் மீரா. இவர் சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்து இருந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் அதிகாலை அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இருக்கிறார். இதை அந்த வீட்டின் பணியாளர் பார்த்து அலறி இருந்தார். இதன்பின் காவேரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு சொல்லப்பட்டாலும் சிறுமி மீரா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் விசாரணை:
மேலும், இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அதோடு இந்த சம்பவத்தின் போது நடிகர் விஜய் ஆண்டனி வீட்டில் இல்லை என கூறப்படுகிறது. மீராவின் இறப்பிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் வந்து விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்கள். மீராவுடன் படித்த பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களும் மீராவின் நினைவுகளை பகிர்ந்து கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார்கள். இந்த நிலையில் மீரா ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்து சிகிச்சை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், இவருடைய பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரித்த போது மீரா அந்த மாதிரி எந்த ஒரு சிகிச்சை எடுத்ததாக எங்களுக்கு தெரியவில்லை என்று கூறிவிட்டார்கள்.
மீரா இறப்புக்கு காரணம்:
அதோடு மீராவே மனநல மருத்துவர்கள் இடம் சிகிச்சை எடுத்தது குறித்து போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. எந்தப் பிரச்சனை என்றாலும் ஒரு நிமிடம் எங்களிடம் சொல்லி இருந்தால் இதை நடக்க விட்டிருப்போமா, இந்த ஜென்மத்தில் நீ தனியாக பிரிந்து சென்றாலும் அடுத்த ஜென்மத்தில் நாம் சேர்ந்து வாழ்வோம் என்று கண்ணீர் விட்டு மீராவின் தாய் பாத்திமா கதறி அழுத்திருக்கிறார். தன் மகளின் பிரிவை தாங்க முடியாமல் விஜய் ஆண்டனியும் தரையில் விழுந்து கதறி அழுது இருக்கிறார். மீராவின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. தற்போது இந்த தகவல் தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.