தன்னை குறித்த விமர்சனங்களுக்கு விஜயின் மாநாட்டை தொகுத்து வழங்கிய துர்கா தேவி கொடுத்திருக்கும் பதிலடி தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே விஜய் மாநாடு குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. சமீபத்தில் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்ரவாண்டி தொகுதியில் உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற்றது.
பிரம்மாண்டமாக நடந்த இந்த மாநாட்டில் விஜய்க்கு ஈகுவலாக வைரலாகி, விமர்சனங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார் தொகுப்பாளர் துர்கா தேவி.

'தளபதி இதோ வந்துவிட்டார்… அதோ வந்துவிட்டார்' என ஆரவாரத்தோடு துர்கா தேவி தொகுத்து வழங்கியது, மீம்ஸ்களாக இணையம் எங்கும் வைரலாகி இருந்தது. அதோடு சிலர், இதெல்லாம் ஒரு குரலா? அவருடைய முக பாவனைகளை சரியில்லை. அவருடைய தமிழ் உச்சரிப்பும் நன்றாக இல்லை. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதமும் சுமாராகத்தான் இருக்கிறது என்றெல்லாம் மோசமாக பேசியும், உருவ கேலி கூட செய்திருந்தார்கள்.
துர்கா தேவி பேட்டி:
அதுமட்டுமில்லாமல் சில தொகுப்பாளர்களே துர்கா தேவியை விமர்சித்தும் சோசியல் மீடியாவில் பதிவுகளை போட்டு இருந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் துர்கா தேவி, சோசியல் மீடியாவில் என்னை குறித்து வரும் விமர்சனங்களை பார்த்தேன். அது எந்த அளவிலும் என்னை பாதிக்கவே இல்லை. காரணம், இதை நான் எதிர்பார்த்த ஒன்று தான். பல அரசியல் மேடைகளில் நிகழ்ச்சி தொகுப்பாளர்களை பார்க்கும்போதெல்லாம் அந்த இடத்தில் நாம் இருந்திருக்கக் கூடாதா? என்று நான் நிறைய முறை நினைத்திருக்கிறேன். நான் பேசிருக்க வேண்டிய இடம் இதுதான். மிஸ் ஆயிடுச்சு என்ற ஆதங்கமும் எனக்கு இருந்தது.

மாநாடு குறித்து சொன்னது:
அந்த மாதிரி தான் என்னை விமர்சித்தவர்களுடைய மனதுக்குள் ஏற்பட்ட பிரதிபலிப்பு என்று நினைக்கிறேன். நான் மேடையில் உணர்ச்சிவசப்பட்டு தான் பேசினேன். காரணம், அந்த இடத்தில் நான் மாநாட்டின் வெறும் தொகுப்பாளர்கள் மட்டும் இல்லை. விஜயினுடைய தீவிர ரசிகை. அரசியல் மேடையில் எப்படி பேச வேண்டுமோ அப்படித்தான் நான் பேசி இருந்தேன். அதில் எந்த அளவிலுமே மாற்றமே இல்லை. என்னோட பெஸ்ட் நான் கொடுத்தேன். என்னுடைய குரல் உங்களுக்கு தொந்தரவாக இருந்தால் உண்மையிலேயே நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
https://www.youtube.com/watch?v=RrcZX4fE7ps
விமர்சனங்களுக்கு கொடுத்த பதிலடி:
மேலும், விஜயின் மாநாட்டிற்கு யாரும் சாதாரணமாக வந்திருக்க முடியாது. பல கஷ்டங்கள், பாதிப்புகள், ஏளனங்கள் எல்லாத்தையும் கடந்து தான் இந்த இடத்தை நான் அடைந்திருக்கிறேன். விஜய் தன்னுடைய முதல் பிரம்மாண்ட மாநாட்டை தொகுத்து வழங்க அவருடைய ரசிகைக்கு வாய்ப்பு கொடுத்தது பலருக்குமே வயித்தெரிச்சலையும் ஏமாற்றத்தையும் கொடுத்திருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. நான் விஜய் மாநாட்டை தொகுத்து வழங்கியதற்கு நீங்கள் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஆனால், அதை செய்யவில்லை.

துர்கா தேவி சொன்ன கருத்து:
அவர் நினைத்திருந்தால் பிரபலமாக இருக்கிற எத்தனையோ நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவரை வைத்து இந்த மாநாட்டை நடத்தி இருக்கலாம். ஆனால், ஒரு சாதாரண பெண்ணான என்னை மாநாட்டை தொகுக்க வைத்ததற்கு நீங்கள் பாராட்டிருக்க வேண்டும். ஆனால், அதையும் நீங்கள் செய்யவில்லை, பரவாயில்லை. வீட்டில் அக்கா தங்கை செல்லமாக கோபப்படுவார்களே அந்த மாதிரி தான் நான் இதையும் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.






