சமீபத்தில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளின் அமைப்பான ‘ரோட்டராக்ட்’ (rotaract) சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவ்விழாவில் தனது திமுக தலைவர் ஸ்டாலின் மீது கமல்ஹாசன் மீண்டும் கடுமையான விமர்சனம் வைத்துள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
தாமதமாக அரசியலுக்கு வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அரசியல் மாணவர்களுக்கு தேவையில்லை என்று சொல்வதை ஏற்க மாட்டேன். மாணவர்களைப்போல நாட்டில் அனைவருக்கும் அரசியல் தேவை. சாதி பெருமை பற்றி பேசாமல் இருந்தாலே கலவரம் குறையும்.
முதல்வர் என்பவர் மக்களுக்காக உழைக்கும் அதிகாரி. ஆட்சியில் இருப்பவர்கள் 5 ஆண்டுகள் சரியாக ஆட்சி செய்கிறார்களா? என்பதை கவனியுங்கள். அரசியலில் என்னுடைய நேரத்தையும் முதலீடு செய்துள்ளேன். சட்டப்பேரவைக்கு சென்றால் சட்டையை கிழித்துக்கொள்ளமாட்டேன். அப்படி சட்டை கிழிந்தாலும் நல்ல சட்டை போட்டுக் கொண்டுதான் வெளியில் வருவேன்.
இந்நிலையில் தனது அப்பாவை பற்றி விமர்சித்த கமலை நடிகர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.
கிராம சபைக் கூட்டத்தை நான் தான் கண்டு பிடிச்சேன் என்று அறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு இந்தப் படங்கள் சமர்ப்பணம்என்று கூறி அதில் கமலை டேக் செய்துள்ளார்.