ப்ளூ சட்டை விமர்சனம் குறித்து பேசிய உதயநிதி – ‘கலகதலைவன்’ படத்தின் விமர்சனத்திற்கு கீழ் ரசிகர்கள் போட்டு வரும் கமெண்ட்ஸ்.

0
346
udhay
- Advertisement -

முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மகனான உதயநிதி நடித்திருந்த “கலகத் தலைவன்” திரைப்படமானது நேற்று வெளியாகியது. இந்நிலையில் உதயநிதி தான் நடித்த படத்தை ப்ரமோட் செய்வதற்காக தற்போது பல பிரபல யூடியூப் சேனல்களில் பேட்டியளித்து வருகிறார். இந்நிலையில் பிரபல யூடூபரான இர்ஃபான் உங்களுக்கு பிடித்த சினிமா விமர்சகர் யார் என்ற கேட்ட கேளிவிக்கு உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உதயநிதி ஸ்டாலின் “ரெட் ஜெயிண்ட்” தயாரிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கலகத் தலைவன்.

-விளம்பரம்-

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், நிதி அகர்வால், ஆரவ், கலையரசன் போன்றவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அரோல் கோரெல்லி இசையமைத்துள்ளார். இந்நிலையில் நேற்று வெளியான இப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், இதனை மேலும் வலுவூட்ட உதயநிதி ஸ்டாலின் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்த வருகிறார்.

- Advertisement -

தற்போது பிரபல உணவு விமர்சகரான இர்ஃபான் யூடியூப் சேனலில் உதயநிதி கலந்து கொண்டு சாப்பிட்டு கொண்டே பேட்டியளித்து கொண்டிருந்தார். அதில் இர்ஃபான் உங்களுக்கு மிகவும் பிடித்த சினிமா விமர்சகர் யார் என்று கேட்டதற்கு`தனக்கு ப்ளூ சட்டை மாறன் என்ற விமர்ச்சகரை பிடிக்கும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த படப்பிடிப்பிற்கு முந்தைய நாள் அவர் செய்த விமர்சனம் தனக்கு பிடித்திருந்தது என்று உதயநிதி கூறினார். இத்தகைய நிலையில் இந்த வீடியோவிற்கான படப்பிடிப்பு நவம்பர் 13 தேதி என்றும் கூறும் நிலையில் 12ஆம் தேதி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்திருந்த பரத் மற்றும் வாணி போஜனின் “மிரல்” போன்ற படங்களின் விமர்ச்சனத்தை தான் குறிப்பிடுகிறார் என்று இர்ஃபான் கூறினார்.

காலம் காலமாக மாற்றாதே ஒரே ப்ளூ சட்டையை அணிந்து கொண்டு, ஆரம்ப நடிகர் முதல் முன்னணி நடிகர்கள் வரை யார் நடித்த திரைப்படமாக இருந்தாலும் சரி அவர்களின் திரைப்படங்களை பாரபட்ச்சம் இல்லாமல் கழுவி ஊத்தி விமர்சனம் செய்வார் தான் ப்ளூ சட்டை மாறன். இவருடைய பேச்சுக்கும் ,திரைப்படங்களை உண்மை நிகழ்வுகளுடன் சேர்த்து விமரிசிக்கும் இவரது விடியோவை பார்பதர்க்காகவே கிட்டத்தட்ட 1.5 மில்லியன் ரசிகர்கள் இவரது யூடியூப் சேனலை சபிக்கிரைப் செய்து வைத்திருக்கின்றனர். மேலும் இவருக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கின்றனரோ அந்த அளவிற்கு எதிரிகளும் இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்நிலையில் பல முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படங்களை கழுவி ஊத்தும் ப்ளூ சட்டை மாறன் நடிகர் சிம்பு நடித்திருந்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தையும் விமர்சனம் செய்திருந்தால். இதற்கு பதிலளிக்கு வகையில் ஒரு நேர்காணலில் இப்படத்தின் இயக்குனர் “கௌதம் வாசுதேவ் மேனன்” கூட படங்களை கழுவி ஊத்தும் ப்ளூ சட்டை மாறன் அவர்களை தரை லெவலில் சென்று ஏதாவது செய்யலாம என்று நினைத்தாக கூறியிருந்தார்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனக்கு பிடித்த சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் என்று கூறியிருப்பது ஷோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் ஆளுங்கட்சி என்பதால் தான் ப்ளூ சட்டை உதயநிதி படங்களை பெரிதாக விமர்சிப்பது இல்லை என்று ரசிகர்கள் பலர் கமண்ட் செய்து வருகின்றனர். நெஞ்சுக்கு நீதி படம் வெளியான போது கூட ப்ளூ சட்டை அந்த படத்தை பெரிதாக விமர்சிக்கவில்லை.

மற்ற படங்களை விமர்சிக்கும் போது தனது நக்கல் நய்யாண்டியுடனும் நடிகர்களை கேலி செய்வது ப்ளூ சட்டை மாறனின் ஸ்டைல். ஆனால், உதயநிதி படங்களை விமர்சிக்கும் போது ப்ளூ சட்டை கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் ‘கலகதலைவன்’ விமர்சனத்திற்கு கீழும் ப்ளூ சட்டையை பலரும் கேலி செய்து வருகின்றனர்.

Advertisement