அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம் என உறுதியளித்தனர் – கர்ணன் படம் குறித்து உதயநிதி.

0
3664
karnan
- Advertisement -

‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் (ஏப்ரல் 9) வெளியாகி இருந்தது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

இந்த படம் வெளியாகும் முனரே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படம் புதிய அரசியல் சர்ச்சை ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது கொடியன்குளம் கலவரம் நடந்ததும், உயிர்கள் பறிக்கப்பட்டதும் 1995-ஆம் ஆண்டில். அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்தார். ஆனால், 1998-ல் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது கொடியன்குளம் கலவரம் நடந்ததாக கர்ணனில் காண்பிக்கப்படுகிறது எனவும், இது வரலாற்றை திரித்து கூறும் செயல் எனவும் சில விமர்சகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

இதையும் பாருங்க : ஜார்ஜியா ரசிகருக்கு விஜய் போட்டுள்ள ஆட்டோகிராப் – பல ஆண்டு பழக்கத்தை மாற்றிவிட்டாரே. என்ன தெரியுமா ?

- Advertisement -

அதே போல 1997- ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது போக்குவரத்து கழகங்களுக்கு வரலாற்று நாயகர்களின் பெயர்களை சூட்டியபோது, மாவீரன் சுந்தரலிங்கனார் பெயர் வைத்த பேருந்துகளில் ஏற மாட்டோம் என ஆதிக்க சாதியினர் கலவரம் செய்தனர். சுந்தரலிங்கனார் பெயரை மாற்றியே ஆக வேண்டிய சூழல் ஏற்பட்ட போது, அவரது பெயரை மாற்றி அவருக்கு இழுக்கு சேர்க்க மாட்டேன் என்று ஒட்டு மொத்தமாக அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் சூடிய பெயர்களை மாற்றினார் கருணாநிதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா ஆட்சியில் நடந்த கலவாரத்தை எப்படி கலைஞர் ஆட்சியில் நடந்தது போல காண்ப்பிக்கலாம் என்று பலர் குற்றச்ட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் அந்த தவறை திருத்திக்கொள்வதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளதாக உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ் ,அண்ணன் கலைப்புலி தானு, இயக்குநர் மாரி செல்வராஜ் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.

-விளம்பரம்-

1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement