மேலும் இப்படத்தின் ஒளிப்பதிவை பி.சி.ஶ்ரீராம் மேற்கொள்கிறார். படத்தின் இசையை இளையராஜா மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, மிஷ்கின் நடித்து இயக்கிய நந்தலாலா படத்தில் சாந்தனு நாயகனாக நடிக்கவிருந்தது.
அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனதும் சாந்தனுவுக்கு இப்படம் பெரிய திருப்பு முனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. உதயநிதி, இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் தமன்னாவுடன் இணைந்து 'கண்ணே கலைமானே' படத்தில் நடித்து வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.




