‘கொக்கர கொக்கரக்கோ’ பாடலுக்கு Vibe செய்யும் 2k கிட்ஸ், வைரலான இன்ஸ்டா ரீல்ஸ்கள் – உதித் நாராயண் நெகிழ்ச்சி.

0
679
udit
- Advertisement -

இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் கில்லி. இந்த படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படம் வெளியாகி வசூலிலும், மக்கள் மத்தியிலும் நல்ல பெயரைப் பெற்றிருந்தது. எப்போது பார்த்தாலும் சலிக்காத திரைப்படங்கள் வரிசையில் கில்லி திரைப்படத்திற்கும் ஒரு இடம் உண்டு. மேலும், கில்லி திரைப்படம் வெளியாகி தற்போது 20 ஆண்டுகளை பூர்த்தி செய்ய இருக்கிறது.

-விளம்பரம்-

இப்படத்தில வேலுவாக வரும் விஜய் மற்றும் கதாநாயகி திரிஷாவுக்கு இடையேயான காதல், பரபரக்கும் திரைக்கதை குடும்பம் பாசம், கபடி விளையாட்டின் மீது உயிர் என செல்லும் திரைக்கதையில் வலிமையான வில்லனாக வரும் முத்துப்பாண்டி (பிரகாஷ் ராஜ்) கதாநாயகி திரிஷ்வின் மீது வைக்கும் ஒரு தலை காதல் என அட்டகாசமான கதையா கொண்ட இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் பெரிய அளவில் ஹிட் அடித்திருந்தது. இந்நிலையில் கில்லி படத்தில் வரும் “கொக்கர கொக்கரக்கோ” பாடல் பல ஆண்டுகள் கழித்து தற்போது ஷோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

- Advertisement -

உதித் நாராயணன் :

இந்த சூழ்நிலையில் தான் இப்படலை பாடிய உதித் நாராயணன் அவர்களை பிரபல செய்தி ஊடகம் ஓன்று பேட்டி எடுத்திருந்தது. அதில் தற்போது ட்ரெண்டாகி வரும் “கொக்கர கொக்கரக்கோ” பாடல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “நான் மும்பைக்காரன் என்றாலும் தமிழ் இனைஞர்கள் நான் பாடிய “கொக்கர கொக்கரக்கோ” பாடலுக்கு அழகாக நடனமாடி சோசியல் மீடியாக்களில் ரீலிஸ் பதிவிட்டு வருவது மகிச்சியாக இருக்கிறது.

கொக்கர கொக்கரக்கோ பாடல் :

கொக்கர கொக்கரக்கோ பாடல் இவ்வளவு வருடங்கள் கழித்து ட்ரெண்ட் ஆகியிருக்கிறது. ஆனால் இந்த பாடல் வெளியான போதே பெரிய ஹிட் அடித்தது அதோடு படமும் சூப்பர் ஹிட் அடித்ததது. இந்த பாடலை பாட எனக்கு வாய்ப்பளித்த “கில்லி” படத்தின் இசையமைப்பாளர் வித்தியாசாகர் சாருக்கும், சூப்பர் ஸ்டார் விஜய் சாருக்கும் என்னுடை நன்றிகள். கில்லி பாடல் வரிகள் என்னுடைய குரலினால் ஹிட் அடித்தாலும் அதற்கு முக்கியமான காரணம் விஜய் தான். அவர் அந்த பாடலுக்கு மிகவும் அருமையாக நடனமாடினார்.

-விளம்பரம்-

பாடல் ஹிட் அடித்ததற்க்கு காரணம் விஜய்தான் :

எப்போதுமே எனக்கு விஜய்யின் மீது தனிப்பட்ட மரியாதை இருக்கிறது. கில்லி படம் ஹிட் அடுத்த போது நான் விஜய் சாரை சந்திக்கவில்லை. ஆனால், நான் பாடிய பாடல் விஜய்க்கு பிடித்திருந்த காரணத்தினால் தான் விஜய் சார் அதனை ரசித்து பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். படம் ஹிட்டான பிறகு விஜய் சார் எனக்கு நன்றி சொன்னதாக தரணி என்னிடம் கூறினார். “கொக்கர கொக்கரக்கோ” பாடலில் என்னுடைய முழு திறமையையும் பயன்படுத்தி பாடினேன் அதற்க்கான பலனை தமிழ் மக்கள் எனக்கு கொடுத்திருக்கின்றனர் என்று மகிச்சியாக கூறினார் பாடகர் உதித் நாராயணன்.

Advertisement