உள்குத்து விமர்சனம்

0
1271
- Advertisement -

தன்னைக் கொலைசெய்ய ஸ்கெட்ச் போடும் கூட்டத்துக்குள் இணையும் ஹீரோ பற்றிய கதைதான் `உள்குத்து’. `திருடன் போலீஸ்’ படத்துக்குப் பிறகு இணைந்திருக்கும் தினேஷ் – கார்த்திக் ராஜூ கூட்டணி, இந்தமுறை கையில் எடுத்திருப்பது ஆக்‌ஷன். ஆனால், அது எடுபடுகிறதா?

-விளம்பரம்-

ulkuhu

- Advertisement -

வீட்டைவிட்டு வெளியேறி மீனவக் குப்பத்துக்குள் வந்த ராஜாவுக்கு (தினேஷ்) தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார் `சுறா’ சங்கர் (பாலசரவணன்). பாலசரவணின் தங்கை கடலரசியைப் (நந்திதா) பார்த்ததும் தினேஷுக்குக் காதல். இதற்கிடையில் ஏரியாவில் பெரிய தாதாவான `காக்கா’ மணி (சரத் லோஹித்சவா) ஆட்களுடன் பிரச்னை, சண்டை என இருக்கிறார் தினேஷ், ஒருகட்டத்தில் அவரது மகன் சரவணனை (திலீப் சுப்பராயண்) அடித்துவிடுகிறார். இதனால் கோபமாகி, தினேஷை கொலை செய்யத் திட்டமிடும் சரத், அவரைத் தன் கூட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார். அது ஏன், தினேஷ் யார், `சுறா’ சங்கர்ன்னா சும்மாவா போன்ற விஷயங்களைச் சொல்கிறது `உள்குத்து’

மாஸ் ஹீரோ நடிப்பதற்கு ஏற்ற கதைக் களம், அதற்கு ஏற்ப இரண்டு ஸ்லோ மோஷன் சண்டைக் காட்சிகளும் உண்டு, அதை தன்னால் முடிந்த அளவு சரியாகச் செய்ய முயற்சி செய்திருக்கிறார் தினேஷ். ஆனால், இன்னும் விறைப்புடன் திரியும் உடல்மொழியை மாற்றாமல் இருப்பதும், எமோஷனல் காட்சிகளில் திணறுவதும் அப்படியே தெரிகிறது. படம் முழுக்க வரும் கதாபாத்திரம், நகைச்சுவைக்கான நிறைய இடம் இருந்தும் அதை முழுமையாப் பூர்த்தி செய்யாமல் வந்து போகிறார் பாலசரவணன். “சுறா சங்கர்ன்னா சும்மாவா” என்பதை மட்டும் பெரிய காமெடி என நினைத்து சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் ஒருகட்டத்துக்கு மேல் வெறுப்பேற்றுகிறது.

-விளம்பரம்-

Ulkuthu

முந்தைய பல படங்களில் நடித்த அதே கதாபாத்திரம்தான் என்பதால், அதே டேய்ய்ய்ய், அதே வெட்டுங்கடாஆஆஆஆ என வழக்கமான நடிப்பைத் தந்திருக்கிறார் சரத். திலீப் சுப்பராயண் முதல் படம் எனத் தெரியாதபடி மிரட்டலான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நந்திதாவுக்கு, கையில் ஸ்டார் டாட்டூ போட்ட, மீனவப் பகுதியைச் சேர்ந்த பெண் வேடம். மீன் குழம்பு வைத்து பரிமாறுகிறார். கூடவே பாடல்களின் மாண்டேஜ் காட்சிகளில் வந்து போகிறார், ஹீரோவின் ஃப்ளாஷ் பேக்கை அழுதுகொண்டே கேட்கிறார். மற்றபடி கதையில் அவரது கதாபாத்திரத்திற்கு வேறு எந்த வேலையும் கிடையாது. கொஞ்சநேரமே வந்தாலும் ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமன் நடிப்பு சொல்லிக்கொள்ளும் படியாய் இருந்தது

ulkuuthuநடிகர்களை நடிக்கவைப்பதில் இயக்குநர் கார்த்திக் ராஜூ எவ்வித மெனக்கடலும் காட்டவில்லை என்பது தெரிகிறது. கூடவே நடிகர்கள் எத்தனை சிறப்பாக நடித்திருந்தாலும், திரைக்கதையும் அதற்கான கதாபாத்திரங்களும் பலவீனமாக இருப்பதால் எல்லாமே வீண்தான். குப்பம் என்றால் அது எந்த ஊரில் இருக்கிறது? அவர்கள் பேசும் மொழியில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை எளிதில் யூகித்துவிடக் கூடியதாக இருப்பதால் பரபரப்பான காட்சியாக இருக்க வேண்டியவைகூட பார்வையாளர்களுக்குக் கொட்டாவி வரவைக்கின்றன. தினேஷ், நந்திதா இருவருக்குள்ளும் காதல் வருவதற்கான காரணங்கள் எல்லாம் ஓவரோ ஓவர். சரத், தினேஷை மன்னித்து தன் கூட்டத்தில் சேர்ப்பதற்கான காரணம், தினேஷுன் முன் கதை எனக் கதைக்கு மிக முக்கியமான இரண்டு புள்ளிகளில் அழுத்தம் எதுவும் இல்லை என்பது படத்தை மிக பலவீனமாக்குகிறது. பிரதான பிரச்னை தாண்டி படத்தில் இடம்பெறும் காதல் காட்சியும், காமெடி காட்சியும் சிறப்பாக இல்லாததால் சோர்வடைய வைக்கிறது. படத்துக்குத் தேவையான ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார் பி.கே.வர்மா. திலீப் சுப்பராயன் வடிவமைத்திருந்த சண்டைக் காட்சிகள், ஓரளவு நம்பும்படி இருந்தது படத்துக்கு வலு. குறிப்பாக சரத் இடத்தில் நடக்கும் கபடி சண்டைக்காட்சி சிறப்பு. பாடல்கள் நன்றாக இருந்தாலும், படத்துக்கு பலமாக அமையே வேண்டிய பின்னணி இசையில் சறுக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.

படத்தின் இறுதியில் வன்முறை தவறு என ஹீரோ பேசுவது ஓகே. ஆனால், “டேங்க்ல தண்ணியில்ல மோட்டர் போடு” என்பது போல, “கத்தி எடுத்தா மீன் வெட்டு, கட்டை எடுத்தா துடுப்புப் போடு” என மிக விட்டேத்தியாக அட்வைஸ் போடுவதெல்லாம் அபத்தம். அதை சொல்வதற்குண்டான எந்த பலமும் படத்துக்கு இல்லாததால், இன்னுமொரு வசனமாக வந்து போகிறது.

Advertisement