இளைய தளபதி விஜய் தனக்கு வந்த படங்களை வேண்டாம் என்று தவிர்த்து.பின்னர் அந்த படத்தில் வேறு சில நடிகர்கள் நடித்து அந்த படம் மிக பெரிய வெற்றியடைந்தது என்று நமது பக்கத்தில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.
பொதுவாக விஜய் கதைகள் பெரும்பாலும் காதல் மற்றும் காமெடி கலந்த படமாக தான் இருந்தது. அதனால் தான் இவருக்கு குழந்தை ரசிகர்களும்,பெண் ரசிகர்களும் மிக அதிகம்.அப்படிப்பட்ட காமெடி மற்றும் காதல் கதையாக 1996 இல் வெளிவந்த உள்ளதை அள்ளித்தா படம்.இயக்குனர் சுந்தர். சி இயக்கிய இந்த படத்தில் கார்த்திக் மற்றும் கௌண்டமணி நடித்திருப்பார்கள்.இந்த படத்தில் நடிக்க முதலில் விஜயை தான் அணுகியுள்ளார் இயக்குனர் சுந்தர். சி ஆனால் அப்போது கோயம்புத்தூர் மாப்பிள்ளை,பூவே உனக்காக,மாண்புமிகு மாணவன் போன்ற படங்களில் நடித்து வந்த விஜய் சுந்தர். சி படத்தில் நடிக்க நோ சொல்லிவிட்டார்.
ஆனால் இந்த படம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் கரகாட்டகாரண் ,சின்ன தம்பி போன்ற படத்திற்கு பிறகு 300 நாட்கள் ஓடியது படம் என்று பெருமையையும் படைத்தது.ஒருவேளை இந்த படத்தில் விஜய் நடித்திருந்த்தால் அவரது சினிமா வாழ்வில் இன்னமும் இந்த படம் பேசப்பட்டிருக்கும்.எது எப்படியோ விஜய் அந்த படத்தில் நடிக்காதது விஜயை விட அவரது ரசிகர்களுக்கு தான் மிகப்பெரிய வருத்தம்.