விக்ரம் மனைவி பற்றி பலரும் அறியாத உண்மைகள் !

0
4575
vikram-wife

தமிழ் சினிமாவில் வித்யாசமாகவும் டெடிகேசனுடனும் நடிப்பவர் விக்ரம். தற்போது 51 வயதாகும் அவருக்கு கடந்த 1992ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த சைலஜா பாலகிருஷ்ணன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு துருவ் என்ற மகனும் அக்சிதா என்ற மகளும் உள்ளனர்.

VIKRAM

கிட்டத்தட்ட 100 படங்கள் நடித்திருந்தாலும் தனது குடும்பத்தின் மீது மீடியா வெளிச்சம் படாதவாறு பார்த்துக்கொள்வார் விக்ரம். சமீபத்தில் விக்ரம் மகளுக்கும் கலைஞர் கருணாநிதியின் கொள்ளு பேரனுக்கும் திருமணம் நடைபெற்றது. அந்த விழாவில் கூட தன் மனைவி சைலஜாவின் போட்டோ இல்லாமல் பார்த்துக்கொண்டர்.

ஆனால், மனைவியை பற்றி நிறைய விஷயங்கள் மீடியாவிடம் கூறி இருக்கிறார் விக்ரம். சைலஜா, அடிப்படையில் ஒரு சைக்காலஜி நிபுணர். மேலும், சமூக சேவையில் சிறந்தது விளங்குபவர் விக்ரமின் மனைவி. போதை பொருட்களுக்கு அடிமையாகும் பலருக்கு கவுன்சிலிங் மூலம் மறுவாழ்வு கொடுத்துள்ளார்.

chiyan vikram

ஒரு முறை காரில் சென்று கொண்டிருக்கும் போது, விக்ரமின் மனைவியிடம் கை முறிந்தது போல ஒருவர் பிச்சை கேட்டுள்ளார். விக்ரமின் மனைவி தன் கையில் இருந்தவற்றை அவருக்கு கொடுத்துள்ளார். இதனை பார்த்த விக்ரம், கை முறிந்தது போல கட்டுபோட்டு நம்மை ஏமாற்றுகின்றனர்.

அவர்களுக்கு போய் ஏன் பணம் கொடுக்கிறாய் என கேட்டுள்ளார். இதற்கு விக்ரமின் மனைவி, அது எனக்கும் தெரியும், ஆனால் பார்க்க மிகவும் பரிதாபமாக இருக்கிறது அதனால் நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் அல்லவா, என கூறியுள்ளார்.

Drug-Addiction

தற்போது விக்ரமின் மனைவி சென்னையில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் சைக்காலஜி டீச்சராக வேலை செய்து வருகிறார்.