விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் மதியின் பெற்றோர்கள், இந்த வீட்டில் நீ அட்ஜஸ்ட் பண்ணி தான் வாழனும். எதிர்த்து பேசாதே. எங்களுடைய நிலைமையை யோசித்துப் பார் என்றெல்லாம் சொன்னார்கள். மதி, நீங்கள் என்னை மறந்து விடுங்கள். இங்கு யாரு கூப்பிட்டாலும் வராதீர்கள் என்று சொல்லி விட்டார். அதற்குப்பின் தங்கராஜ், இந்த பிரச்சனைக்குள் வந்துவிட்டார். அவர் மதியின் அப்பா-அம்மாவை அங்கிருந்து கிளம்ப சொன்னார். அதற்கு பின் மதியை தனியாக அழைத்து அறிவுரை எல்லாம் சொன்னார். ஆனால், மதி அதை பற்றி பெரிதாகவே கண்டு கொள்ளவில்லை.

பின் தங்கராஜ், தனக்கு வேலை இருப்பதாக சொல்லி அங்கிருந்து சென்றார். சுரேஷ், எது வேணாலும் நடந்திருக்கட்டும். நீ என்னுடைய அப்பா, அம்மாவிடம் மன்னிப்பு கேளு என்றார். மதி, நான் எந்த தவறும் செய்யவில்லை. யாரிடமும் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறார். பாக்யராஜ், மலர் எல்லோருமே மதியை மன்னிப்பு கேட்க சொன்னார்கள். ஆனால், மதி முடியாது என்றார். இதனால் கொந்தளித்த சுரேஷ், இனிமேல் நீ இந்த வீட்டில் இருக்க தேவையில்லை என்று மதியை பிடித்து வெளியே தள்ளுகிறார். மதியும் வீட்டிற்கு வெளியே சென்றார். வீட்டு திண்ணையில் தான் மதி உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
அழகே அழகு:
மதி தன்னுடைய சுயமரியாதைக்காக தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். சுரேஷ், நீ எங்கேயாவது போ. என் வீட்டில் இருக்காதே. வேலையை முடித்து வரும்போது நீ இங்க இருக்க கூடாது. எங்கயாவது போய் தொலை. உன்னால்தான் என் வீட்டில் நிம்மதி இல்லை என்று ரொம்ப அவமரியாதையாக பேசி விட்டார். அதற்குப்பின் மதி தன்னை சுயமரியாதை இல்லாதவள் என்று பேசியதை நினைத்து மலர் வருத்தப்பட்டு கொண்டிருந்தார். பாக்கியராஜ் எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் மலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சீரியல் ட்ராக்:
இதையெல்லாம் கவனித்த லட்சுமி, இதுதான் சந்தர்ப்பம் என்று மலரை திட்டிக் கொண்டிருந்தார். பின் மதி வாசலில் உட்கார்ந்து கொண்டிருப்பதால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பார்த்து லட்சுமி இடம் விசாரித்தார்கள். லட்சுமி, மலர் இருவரும் ஏதேதோ சொல்லி சமாளித்தார்கள். பின் அவமானம் தாங்க முடியாமல் லட்சுமி, மதியை உள்ளே அழைக்கிறார். ஆனால், மதி முடியாது என்று சொல்லி விட்டார். வீட்டில் உள்ள எல்லோருமே என்ன செய்வதென்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது மலரும் மதிக்குத் துணையாக வெளியே வாசலில் உட்காருகிறார்.

சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும்போது மதியை அவருடைய பெற்றோர்கள் தங்களுடைய வீட்டிற்கு அழைத்து சென்று விடுகிறார்கள். வீட்டிற்க்கு சென்ற பின்பு பெற்றோர்கள் இருவரும் அறிவுரை சொல்கிறார்கள். ஆனால், மதி அமைதியாக இருக்கிறார். பின் மதிக்கு போன் செய்த சுரேஷ், தயவுசெய்து என் வீட்டு பக்கம் வந்து விடாதே. எங்கேயாவது போய் தொலைந்து விடு என்றெல்லாம் ரொம்ப மோசமாகவே பேசுகிறார். இதனால் மதி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று தன்னுடைய கணவரின் மீது புகார் கொடுக்கிறார். ஆனால், புகார் எடுத்துக் கொள்பவரே அவருடைய கணவர் சுரேஷ் தான்






