படித்துக்கொண்டே ஓட்டலில் வேலை, நண்பனுடன் சும்மா சென்ற போது கிடைத்த வாய்ப்பு – உறியடி பட நடிகர் இப்போ என்ன செய்கிறார்.

0
810
uriyadi
- Advertisement -

உறியடி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் சிவபெருமாள் சமீபத்தில் ஒரு youtube சேனல் அவரிடம் நடத்திய இன்டர்வியூல். சிவபெருமாள் நான் எவ்வாறு இந்த படத்திற்கு நடிக்க வந்தேன் மேலும் உரியடி படத்தில் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களையும் பேசி நம்மிடம் பகிர்ந்து கொண்டார். விஜய் குமார் 2011 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவிற்குச் சென்றபோது ஸ்கிரிப்டை எழுதினார் , முதலில் விடியும் வரை விண்மீங்களாவோம் என்று பெயரிடப்பட்டது , இருப்பினும், தயாரிப்பை எளிதாக்குவதற்கு ஸ்டோரிபோர்டை உருவாக்கும் குமாரின் முடிவின் காரணமாக ஸ்கிரிப்டிங் செயல்முறை ஒரு வருடத்திற்கும் மேலாக தாமதமானது.

-விளம்பரம்-

ஸ்கிரிப்டிங், காஸ்டிங் மற்றும் ப்ரீ-புரொடக்ஷன் பற்றிய சுருக்கமான வேலைகளுக்குப் பிறகு, படம் ஜூலை 2013 இல் முதன்மை புகைப்படம் எடுக்கத் தொடங்கியது மற்றும் அக்டோபரில் முடிந்தது. படத்தின் பெரும்பாலான பகுதிகள் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன . அதைத் தொடர்ந்து நீண்ட போஸ்ட் புரொடக்‌ஷன் கட்டம் மற்றும் தணிக்கை செய்யப்பட்டது. பால் லிவிங்ஸ்டோன் ஒளிப்பதிவு செய்துள்ளார் , அபினவ் சுந்தர் நாயக் படத்தொகுப்பு செய்துள்ளார். நடிப்பு மற்றும் இயக்கம் தவிர, குமார் இசையமைத்துள்ளார்திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் ஒலி பொறியாளராகவும் பணியாற்றினார் , இந்த படத்தில் மசாலா காபி , அந்தோணி தாசன் மற்றும் விஷால் சந்திரசேகர் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட ஒலிப்பதிவு ஆல்பம் இடம்பெற்றுள்ளது .

- Advertisement -

வாய்ப்புக்காக விஜயகுமாரை அனுகினோம் :-

நான் எனது படிப்பதற்காக சென்னை வந்து அசோக் நகரில் தனியாக வீடு எடுத்து தங்கி படித்து வந்தேன். பிறகு பகுதி நேர வேலையாக ஒரு ஹோட்டலில் இரவு நேர வேலை பார்த்து வந்தேன். அதன் பின்னர் எனது நண்பன் சுரேஷ் அடிக்கடி என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பான் சினிமாவில் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்க்க வேண்டும் என்று.திடீரென்று நாங்கள் படிக்கும் கல்லூரியில் டைரக்டர் விஜயகுமார் அவர் படத்திற்காக லொகேஷன் பார்ப்பதற்காக வந்தார். அப்போது கல்லூரியில் ஏற்கனவே சிம்புவின் வாலு பட சூட்டிங் நடந்து கொண்டிருந்ததால் தர முடியாது என்று மறுத்து விட்டார்கள். அப்பொழுது என் நண்பன் அங்கு வந்த டைரக்டர் விஜயகுமார் சந்தித்து தங்களிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக சேர்ந்து கொள்ளலாமா என்று கேட்டான். அதற்கு அவருடைய நம்பரை கொடுத்து தன்னை வந்து ஆபீஸில் வந்து சந்திக்குமாறு கூறிவிட்டு சென்றார்

நன்பனுடன் சென்ற எனக்கு சினிமா வாய்ப்பு :-

பிறகு என் நண்பன் அவரை சந்திக்க செல்லும்போது என்னையும் சேர்த்து கூட்டி சென்று விட்டான் பின் அவரோட ஆபீஸ்க்கு சென்ற பின் நான் வெயிட்டிங் செய்யும் இடத்தில் தூங்கி விட்டேன்.எனது நண்பன் அவரிடம் பேசிவிட்டு எனது தோழன் வந்திருக்கிறான் என்று சொல்லவும் அவர் அவரை வரச்சொல்லுங்கள் என்று கூறினார். அவன் என்னை வந்து அழைத்து சென்றான் அவர் என்னை பார்த்தவுடன் வாங்க பயப்படாமல் வாப்பா என்று தன்னை கை கொடுத்து அறிமுகம் செய்து கொண்டார். பின்பு என்னிடம் நடிக்க தெரியுமா என்று கேட்டார். நடிக்க தெரியும் என்று சொல்லி விட்டேன் அவர் அந்த இடத்தில் ஒரு சிட்டிவேஷன் கொடுத்து என்னை நடிக்க சொன்னார் நடித்துக் காட்டினேன். அருமையாக நடிக்கிறாய் என்று நம்பரை வாங்கிக் கொண்டார்.இப்படிதான் இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்தது என்று தெரிவித்தார்.

-விளம்பரம்-

வெள்ளத்தில் சென்ற படம் :-

பின்பு 2013 ஆம் ஆண்டு 60 நாட்களில் உரியடி சூட்டிங் முடிந்ததாம். பின்பு படமாக்கும் வேலைப்பாடுகள் நடந்து கொண்டிருந்தனர் அந்த சமயத்தில் டைரக்டர் விஜயகுமார் வெளியூர் சென்று இருந்தார்.அப்பொழுதே சென்னையில் ஏற்பட்ட வெள்ளபெருக்கின் காரணமாக இரண்டு புளோர்கள் மழை தண்ணீர் சூழ்ந்தது பின்பு வெளியூரில் மாட்டிக்கொண்ட விஜயகுமார் எனக்கு கால் செய்து ஆபிஸ் சென்று போய் பாருடா என்று கூறினார்.நான் சென்று பார்த்தும் போது பாதி ஆபிஸ் தண்ணீரில் மூழ்கியிருந்தது இரண்டு மூன்று நாட்கள் தண்ணீர் குறைந்த நிலையில் நாங்கள் சென்று பார்த்த பொழுது படம் வைத்திருந்த ஹார்ட்டிஸ்க் இருந்து அனைத்துமே நனைந்து பாழாகி விட்டது பின்பு அவர் வந்து என்னிடத்தில் மிகவும் மனமுடைந்து பேசினார்.பின்பு பிரசாந்த் லேபில் இருந்த ஒரு ஹார்ட் டிஸ்க் வைத்து தான் படம் ரிலீஸ் செய்யப்பட்டது.இதுவே படம் காலதாமதமாக 2016 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனதற்கு முக்கிய காரணம்

பல கஷ்டங்களை கடந்து ரசிகர்களிடம் கைதட்டு :

உறியடி திரைப்படத்தின் ஸ்கிரிப்ட், திரைக்கதை, இயக்கம், நடிப்பு மற்றும் இதர முக்கிய தொழில்நுட்ப அம்சங்களைப் பாராட்டி மிகவும் நேர்மறையான விமர்சன விமர்சனங்களுக்கு 27 மே 2016 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. விமர்சகர்கள் மேலும் யதார்த்தமான திரைப்படத் தயாரிப்பிற்காக விஜய் குமாரைப் பாராட்டினர் மற்றும் முக்கிய தமிழ் திரைப்படங்களில் இருக்கும் கிளுகிளுப்பு கூறுகள் இல்லாதவர், மேலும் தமிழ் சினிமாவின் சிறந்த அரசியல் திரில்லர்களில் ஒன்றாகப் பாராட்டப்பட்டார்.இந்தத் திரைப்படம் விஜய் குமாருக்கு ஒரு திருப்புமுனையைப் பெற்றது, மேலும் படத்தில் அவரது பணிக்காக பல பாராட்டுக்களைப் பெற்றது.

Advertisement