லெஜண்ட்டுடன் நடிப்பதற்கு நயன்தாராவை விட டபுள் மடங்கு சம்பளம் வாங்கியுள்ள நடிகை – அடேங்கப்பா, இத்தனை கோடியா ?

0
482
Urvashi
- Advertisement -

தி லெஜண்ட் படத்தில் நடித்த நாயகி நயன்தாராவை விட டபுள் சம்பளம் பெற்று இருக்கும் செய்தி கோலிவுட் வட்டாரத்தையே வாயை பிளக்க வைத்து இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட ஒரு விளம்பரம் தான் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம். தமிழகத்தில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் இல்லாத இடமே இல்லை. ஜவுளி முதல் வீட்டு உபயோக சாதனம் வரை என பல பொருட்கள் உள்ள கடை தான் சரவணா ஸ்டோர்ஸ். தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலம் தேடிக் கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள்.

-விளம்பரம்-

பேஸ்டு பேஸ்டு பேஸ்டு என்று அணைத்து தொலைக்காட்சிகளிலும் பேஸ்டு கடைக்கான விளம்பரத்தில் கலர் கலரான ஆடைகளை அணிந்து கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான ஸ்னேகா துவங்கி தற்போது இருக்கும் ஹன்சிகா வரை அனைவருடனும் இணைந்து விளம்பரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்து இருக்கிறார் அருள். இந்த விளம்பரத்தில் நடித்த சரவணா அருளை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து இருந்தார்கள்.

- Advertisement -

தி லெஜண்ட் படம் :

இருந்தாலும் அவர் அசராமல் ஹன்சிகா, தமன்னா என்று பல நடிகைகளுடன் நடனமாடி இருந்தார். விளம்பரத்தில் கலக்கிய நம்ம சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தற்போது ‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார். இரட்டை இயக்குனர் ஜேடி- ஜெர்ரி தான் இயக்கி இருக்கும் இந்த படத்தில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் கீத்திகா திவாரி மற்றும் ஊர்வசி ரவுத்தேலா என்று இரு நாயகிகள் நடித்து உள்ளனர்.

இரண்டாம் நாயகி ஊர்வசி ரவுத்தேலா :

ஹிந்தி திரையுலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் ஊர்வசி ரவுத்தேலா. இவர் 2013-ஆம் ஆண்டு வெளி வந்த ‘சிங் ஷாப் தி கிரேட்’ என்ற படத்தில் பாலிவுட் நடிகர் சன்னி தியோலுக்கு ஜோடியாக நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்திருந்தார். இது தான் நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஹீரோயினாக அறிமுகமான முதல் ஹிந்தி திரைப்படம். இதனைத் தொடர்ந்து இவர் கன்னட திரையுலகில் என்ட்ரியானார். பின் இவர் அதிகம் பாலிவுட் படங்களில் தான் கவனம் செலுத்தி வந்தார். ‘சனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, ஹேட் ஸ்டோரி 4’ ஆகிய பல படங்களில் படங்களில் ஊர்வசி ரவுத்தேலா நடித்தார்.

-விளம்பரம்-

நயனை விட டபுள் சம்பளம் :

இதுமட்டுமின்றி ‘பாரோபைசின்’ என்ற பெங்காலி படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருக்கிறார் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. தற்போது இவர் ‘ தி லெஜன்ட் என்ற படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படத்திற்காக இவருக்கு பல கோடிகளில் சம்பளம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது இந்த படத்திற்காக இவருக்கு 20 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ப்ரோமோஷனுக்கு கோடிகளை செலவழித்த அண்ணாச்சி :

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்து வரும் நயன்தாரா கூட 10 கோடி தான் சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், லெஜெண்ட் சரவணன் 20 கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்து இருக்கிறார். இதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்காக Promotion மட்டும் பல கோடிகளை செலவு செய்து இருக்கிறார். அதிலும் ஆடியோ லாஞ்சில் பணத்தை வாரி இறைத்தார் அருள் அண்ணாச்சி.

Advertisement