தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் என்ற அந்தஸ்துடன் இருந்து வரும் சிம்பு நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. மேலும், சிம்பு பல ஆண்டுகளுக்கு முன்னரே மல்டி ஸ்டார் படங்களில் நடித்து இருக்கிறார். அந்த வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ‘வானம்’ படமும் மல்டி ஸ்டார் படம் தான். தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த ‘வேதம் ‘ படத்தின் ரீ – மேக் தான் இந்த திரைப்படம்.
சிம்பு,பரத்,அனுஷ்கா போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்த இந்த படம் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ஜாஸ்மின் பாஸின்.வானம் படத்திற்கு இரன்டு ஆண்டுகள் இவருக்கு எந்த படத்தின் வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதன் பிறகு கன்னடத்தில் “கரோர்பதி” என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு ஒரு மலையாள படத்தில் நடித்துவிட்டு வேறு எந்த மொழியிலும் வாய்ப்பு கிடைக்காமல் பின்னர் தெலுங்கில் ஒரு 3 படங்களில் நடித்துவந்தார். அதன் பிறகு சில ஆண்டுகளில் இவருக்கு படிப்படியாக பட வாய்ப்புகள் குறையவே பின்னர் சின்னத்திரைக்கு வந்துவிட்டார் .மேலும் 2016 ஆண்டு ஹிந்தியில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அடிக்கடி தலைகாட்டி வந்தார்.
9இந்த நிலையில் இவர் பிகினி உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. வானம் படத்தில் இவருக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது பாலிவுட் நடிகை சினேகா உள்ளால் தான். இந்தியில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ‘lucy’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் சினேகா உள்ளால். அதன் பின்னர் இந்தியில் பல படங்களில் நடித்த இவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து இருக்கிறார்.