சன் டீவியில் கடந்த 4 வருடமாக 1400 எபிசோட்களாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தெய்வமகள். இந்த சீரியலில் மிகப் பிரபலம் ஆனவர்கள் சத்யா மற்றும் ரேகா. இருவரும் சீரியலில் பாம்பும் கீரியுமாக அடித்துக்கொள்வார்கள் ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை, நாங்கள் அக்கா தங்கை போன்றவர்கள் எனக் கூறியுள்ளார் சத்யாவாக நடித்துவரும் வாணி போஜன்.
இவர் சமீபத்தில் ஆங்கில சேனலுக்கு அவர் கொடுத்த பேட்டியில் அவரது ஆரம்ப காலம் முதல் தற்போது வரை அனைத்தையும் கூறி இருக்கிறார். அவர் இயல்பிலேயே ஊட்டியில் பிறந்தவர். அங்கு தான் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். சிறு வயதில் இருந்தே மாடலிங்கில் ஆர்வம் கொண்டவராக இருந்த அவர் 50க்கும் மேற்பட்ட விளம்பரகளில் நடித்துள்ளார். அதன் பின்னர் தான் சீரியல் வாய்ப்புகள் வந்துள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது, நான் மாடலிங்கில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனால், திடீரென ஒரு சேலையை கட்டி என்னை ஆடிசனில் நிற்கவைத்தனர். உடனே அந்த கெட்டப்பை வைத்து என்னை செலக்ட் செய்துவிட்டனர். அவ்வளவு தான். வாணி போஜன், தெய்வ மகள் , ஆகா, லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியலில் நடித்துள்ளார். இருந்தும் அவருக்கு தெய்வமகள் தொடர் தான் பிடிக்கும் எனவும் கூறியுள்ளார்.
நான் சீரியலில் நடிக்க ஆரம்பித்தவுடன் பல சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், தெய்வமகள் சீரியல் தான் எனக்கு தமிழகத்தில் எனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. 4 வருடங்கள் நடித்து 1400 எபிசோட்கள் தாண்டிவிட்டது. இன்னும் அது எனக்கு போர் அடிக்காமல் இருக்கிறது.
தெய்வமகள் சீரியலுக்காக நான் என்னுடைய காஸ்டியூம்களை நானே தேர்வு செய்துகொள்வேன். அதேபோல், சீரியலில் பார்க்கும் ரேகா மற்றும் சத்யா கதாபாத்திரம் போல் நிஜத்தில் நாங்கள் அப்படி இருக்கமாட்டோம். இருவரும் சகோதரிகள் போல இருப்போம். இவ்வாறு தனது வாழ்க்கையையும், தெய்வமகள் சீரியல் பயணத்தையும் பற்றி கூறினார் வாணி போஜன்.