பாகுபலி உள்ளிட்ட சில தெலுங்கு படங்கள் தமிழிலும் வந்து வரவேற்பை பெற்றன. இந்நிலையில் முதன் முறையாக ஒரு மாபெரும் கன்னட படம் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அது தான் கன்னட நடிகர் யாஷ் நடித்த கே ஜி எப் திரைப்படம்.
கன்னட சினிமாவின் ராகிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் யாஷ் என்பவர் நடித்துள்ள இந்த திரைப்படம் இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வெளியாகியுள்ளது. பிற மொழியில் நேரடியாக வெளியாகியுள்ள இந்த படம் ஆச்சரியப்படுத்தும் விதமாக தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்ப்பை பெற்றது.
இதையும் பாருங்க : ஹீரோ யார், வில்லன் யார் ? டெவில் யார் ஏஞ்சல் யார்? வெளியான இன்றய எபிசோடின் ஹைலைட்ஸ்.!
யாஷ் கடந்த ‘ஜம்பட ஹுகுடி’ என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி தந்தது கே ஜி எப் திரைப்படம் தான். இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இந்த படத்தில் வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பியாக நடித்த சரண் இந்த படத்தில் நடித்துள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பில் ஏற்கனவே கலந்து கொண்டுள்ளாராம் சரண்.