சினிமாவை பொறுத்த வரை எதிர்ச்சியாக பல தவறுகள் மற்றும் லாஜிக் மீறல்கள் இருப்பது வழக்கமான ஒன்று தான். இது ஒரு சில கத்துக்குட்டி இயக்குனர்கள் படங்களில் காணப்படுவதைவிட மிகவும் ஆண்பவம் வாய்ந்த இயக்குனர் படங்களில் காணப்படுவது தான் ஆச்சரியம். அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கிய வட சென்னை படத்தில் ஒரு மிகப்பெரிய லாஜிக் பிழையை நீங்கள் நோட் செய்து உள்ளீர்களா ? தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதிலும் இவர் தனுஷை வைத்து இயக்கிய படம் எல்லாம் வேற லெவல். தனுஷுக்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்து இவர் தான் என்று சொல்லலாம். 2007 ஆம் ஆண்டு தனுசை வைத்து பொல்லாதவன் என்ற படத்தை இயக்கி சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார்.இந்த படத்திலேயே வெற்றி மாறனுக்கு தேசிய விருது கிடைத்தது. இதனை தொடர்ந்து இவர் ஆடுகளம், உதயம், காக்கா முட்டை, வடசென்னை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார்.
இதையும் பாருங்க : இயக்குனர் சுசீந்திரனின் மனைவி மற்றும் பசங்கள பார்த்திருக்கீங்கள – இவ்ளோ பெரிய பசங்களா.
இறுதியாக தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படம் மிகப்பெரிய அளவு வெற்றி பெற்றது. அதே போல பொல்லாதவன், ஆடுகளம் திரைப்படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக வடசென்னை படத்தின் மூலம் இணைந்தது தனுஷ் – வெற்றிமாறன் காம்போ. வட சென்னையில் வசிக்கும் ஒரு பன்முக கேரம் போர்டு கலைஞரின் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள், காதல், ஆக்ஷன் போன்றவைகள் தான் படத்தின் கதையாக இருந்தது.
இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்றில் தனுஷ் அருகில் இருக்கும் சிறுவன் ஒருவர் சன் ரைஸஸ் அணியின் ஜெர்சியை அணிந்து இருப்பார். சரி, இதில் என்ன லாஜிக் பிழை என்று நீங்கள் கேட்பது புரிகிறது.இந்த காட்சி வரும்போது 2003 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடந்தது போல காண்பிக்கப்பட்டு இருக்கும். ஐபில் ஆரம்பிக்கப்பட்டதே 2008 தான். அதிலும், சன் ரைஸஸ் அணி அறிமுகம் செய்யப்பட்டதே 2013 ஆம் ஆண்டில் தான்.