“வடசென்னை ” திரை விமர்சனம் ..!

0
1327
Vada-chennai

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் “வடசென்னை”. தனுஷின் ஒண்டர்பார் தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.

vada-chennai

- Advertisement -

படம் : வடசென்னை
நடிகர்கள் : தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ்,அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், தீனா.
இயக்குனர்: வெற்றிமாறன்
இசை : சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பு : ஒண்டர்பார் பிலிம்ஸ்
வெளியான தேதி : 17-10-2018

கதைக்களம்:

-விளம்பரம்-

படத்தின் தலைப்பிற்கு ஏற்றார் போல “வடசென்னையை” மையமாக வைத்து தான் முழு படமும் நகர்கிறது. வடசென்னையில் இருக்கும் பல நல்ல விஷயங்களையும் பல கேட்ட விஷயங்களையும் வைத்து ஆரம்பிக்கிறது. ஒரு இளம் கேரம் போர்டு வீரர் இரண்டு ரவுடி கும்பலுக்கு இடையே நடக்கும் பிரச்சனைக்குள் மாட்டிக் கொண்டு பின்னர் எப்படி அதிலிருந்து மீளுகிறார் என்பது தான் கதை.

Dhanush

சில ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய ரௌடியை யாரோ ஒரு நபர் கொலை செய்து விடுகின்றனர். படத்தில் 1987 ல் நான்கு ரௌடிகள் உள்ளனர் குணா(சமுத்திரக்கனி) வேலு(பவன்), செந்தில் (கிஷோர்), பழனி (தீனா ). முதலில் ஒன்றாக இருந்து பின்னர் காலங்கள் செல்ல குணா(சமுத்திரக்கனி) வேலு(பவன்)ஒரு கேங் ஆகவும், செந்தில் (கிஷோர்), பழனி (தீனா ) ஒரு கேங் ஆகவும் பிரிந்து விடுகின்றனர்.

இதில் கேரம் போர்டு வீரரான அன்பு(த னுஷ் )குணாவின் அடியாலுடன் கைகலப்பில் ஈடுபட்டு எதிர்பாரதா விதமாக சிறையில் வந்து விடுகிறார். குணா கேங்கிடம் இருந்து தப்பிக்க அன்பு, செந்தில் கேங்கில் சேர்கிறார். பின்னர் படம் 90 க்கு செல்கிறது அதில் அன்பு(தனுஷ் ) பத்மா(ஐஸ்வர்யா ராஜேஷ்) காதல் காட்சிகள் ஓடுகிறது. அதே போல அதற்கு முன்னாள் அன்பு(தனுஷ் ) 1987 ல் எதிர்பாரதா விதமாக ஒரு கொலையை செய்து கேங்சஸ்டரில் ஒருவராக மாரி விடுகிறார்.

danush

அப்போது தான் மீனவர்களின் தலைவரான ராஜன் (அமீர்) மற்றும் அவரது மனைவி சந்திராவை (ஆண்ட்ரியா) காண்பிக்கின்றனர். பின்னர் அப்படியே அந்த பிளாஷ் பேக் எல்லாம் முடிய 2003 அன்பு (தனுஷ்) , குணா(சமுத்திரக்கனி) மற்றும் செந்தில்((கிஷோர்) இருவரையும் எதிக்றார். இறுதியில் கொலை செய்யப்பட்ட அந்த நபர் யார்,அன்பு (தனுஷ்)கேங்ஸ்டர்களை எதிர்த்து தனது வடசென்னையை பிடிக்கிறாரா என்பது தான் கதை.

ப்ளஸ்:

இந்த தலைப்பிற்கு ஏற்றார் போல வடசென்னையில் நடக்கும் அத்தனை விடயங்களையும் நம் கண் முன்னே நிறுத்தியுள்ளார் இயக்குனர். அவரது 15 வருட உழைப்பு வீண் போகவில்லை. படத்தில் உள்ள அத்தனை கதாபாத்திரத்தையும் நாம் வட சென்னயில் உள்ள ஒரு நபராகவே பார்க்கத் தோன்றும், அதிலும் சிறை சாலை செட் எல்லாம் வேற லெவல் படத்தின் செட் அமைப்பாளருக்கு ஒரு சபாஷ். படத்தின் ஒளிப்பதிவு மற்றும் இசை ஒருவரே அமைத்தால் எப்படி இருக்குமோ அந்த அளவிற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. இப்படி படத்தின் ப்ளஸ் சொல்லிகொண்டே போகலாம்.

Aishwarya

மைனஸ்:

படத்தில் குறை என்று கூற பெரிதாக எதுவும் இல்லை என்றாலும், படத்தில் வரும் நிறைய கதாபாத்திரங்கள் அவர்களுக்கு வரும் பின்னணி போன்றவை தான் கொஞ்சம் கண்ஃயூஸ் ஆகிவிடுகிறது. ஆனால், அந்த அளவிற்கு ஒரு குறையாக தோன்றவில்லை. மேலும், ஒரு சில காட்சிகளை காணும் போது இது போன்ற சிட்சுவேசன் இதுக்கு முன்னாலேயே பார்த்தோமே என்ற ஒரு எண்ணம் தோன்றும். ஒரு சில காட்சிகள் யூகிக்க முடியும்படியும் இருக்கிறது.

படத்தின் இறுதி அலசல்:

தமிழ் சினிமாவில் கேங்ஸ்டர் படங்கள் பல வந்துள்ளது. ஆனால், வெற்றி மாறனின் இந்த படைப்பு அவருக்கும் சரி தனுசுக்கு சரி ஒரு மிக பெரிய பொக்கிஷமாக இருக்கும்.. கொஞ்சம் கொச்சை வார்த்தைகள் இருப்பதால் குடும்ப ரசிகர்கள் பார்ப்பது என்பது கொஞ்சம் கடினம். மொத்தத்தில் இந்த படத்திற்கு Behind Talkies-ன் மதிப்பு 8/10

Advertisement