மேடை கலைஞரும் காமெடி நடிகருமான வடிவேலு பாலாஜி இறந்த சம்பவம் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது கலக்கப்போவது யாரு கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் காமெடியனாக தோன்றி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் வடிவேலு பாலாஜி. . வடிவேல் பாலாஜி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன் 4 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
இவரது பிரிவால் விஜய் டிவி விஜய் டிவி பிரபலங்கள் பலரையும் பாதித்தது. வடிவேல் பாலாஜியின் உடல் அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. மேலும், வடிவேலு பாலாஜியின் இறுதி அஞ்சலியில் விஜய் டிவி பிரபலங்களான தாடி பாலாஜி, ராமர், Kpy பாலா புகழ் என்று பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.இப்படி ஒரு நிலையில் மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜிக்கு விஜய் டிவி சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
அந்த நிகழ்ச்சியில் வடிவேலு பாலாஜியிடும் பணியாற்றிய kpy பிரபலங்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் பழனி பட்டாளம் பேசுகையில், அவர் அழுது நாங்கள் பார்த்தது – ஒரு முறை அவர் நிகழ்ச்சியில் மேக்கப் எல்லாம் போட்டுகொண்டு ரெடியாக இருந்தார். அப்போது அவர் பாட்டி இறந்துவிட்டதாக தகவல் வந்தது. நாங்கள் அவரை போக சொன்னோம். ஆனால். அவரோ இல்ல ஸ்க்ரிப்ட் வீணாகி விடும் எல்லாரும் என்னால் எல்லாரும் நிற்க்கக் கூடாதுனு கண்ணீரை தொடைத்துக்கொண்டு அவர் அனைவரையும் சிரிக்க வைத்தார்.
அவரை போல ஒரு கலைஞன் இனி பிறக்கப்போவது இல்லை என்று கூறியுள்ளார். அந்த அளவிற்கு தனது தொழில் மீதும் தன்னுடன் பணியாற்றிய நபர்கள் மீதும் வடிவேல் பாலாஜி மரியாதையை வைத்திருக்கிறார். ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான் என்ற வரிகள் தான் நினைவிற்கு வருகிறது.