சமீப காலமாக விஜயின் அரசியல் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள். இவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது.
அதுமட்டுமில்லாமல் விஜய் அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார். விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும் தங்களின் ஜனநாயக கடமையை செய்து வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார்கள். அதனின் முக்கிய படியாக தான் கட்சி தொண்டர்களாக மாற்றி இருக்கிறார் என்றும் கட்சி வேலைகளும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் விஜய் செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய் அவர்கள் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருந்தார்.
விஜய் அரசியல்:
இதன் மூலம் விஜய் அரசியல் வருவதற்கு அடுத்த கட்டமாக தான் இதையெல்லாம் செய்கிறார் என்று பலரும் கூறுகின்றனர். அதோடு விஜய் விரைவிலேயே அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் தன்னுடைய கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த பெயரை விஜய் அறிவித்ததில் இருந்து விஜயின் மன்ற உறுப்பினர்கள், ரசிகர்கள் என பலருமே உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
அதோடு 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை. 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகுவோம் என்று விஜய் சொல்லியிருக்கிறார். முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட இருப்பதால் சினிமாவிலிருந்து விலகுவதாகுவதாகவும் அறிவித்து இருக்கிறார். விஜய்யின் புதிய கட்சிக்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.
இப்படி ஒரு நிலையில் தனது அரசியல் என்ட்ரிக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டா விஜய். அதில் ‘தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள்.”என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்” அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்’ என தெரிவித்து இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து வடிவேலு கருத்து தெரிவித்து இருக்கிறார். சமீபத்தில் தாயாரின் ஆத்மா மோட்சம் அடைய வேண்டுமென வேண்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் நந்தீஸ்வரருக்கு முன்பு மோட்ச தீபம் ஏற்றினார் வடிவேலு இதனை தொடர்ந்து பத்திரிகையாளரை சந்தித்து பேசிய வடிவேலுவிடம் செய்தியாளர்கள் ‘விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளது குறித்து கருத்து கேட்டார். இதற்கு பதில் அளித்த வடிவேலு “நீங்களும் வீடியோ எடுத்துக்கொண்டே இருக்காமல் நீங்களும் கட்சி ஆரம்பிக்க வேண்டியது தானே. இப்படியே கேமராவை பிடிச்சிக்கிட்டு வேல பாக்கப்போறீங்களா.
டக்குன்னு நீங்களும் உள்ள வந்து நீங்களும் புது கட்சி ஆரம்பிங்க. எல்லாரும் அரசியல் கட்சி ஆரம்பிச்சிட்டு போக வேண்டியது தானே? யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு நல்லது செய்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். டி ராஜேந்தர் வந்தார், ராமராஜன் வந்தார், பாக்யராஜ் வந்தார். ஆகவே, மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் வரலாம். வரக்கூடாது என யாரும் சொல்ல முடியாது அல்லவா? என்று கூறியுள்ளார்.