தூக்கிவிட்ட மாமன்னன் – கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்திய வடிவேலு. எத்தனை கோடி தெரியுமா ?

0
2684
Maamannan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையில் ஜாம்பவனாக திகழ்பவர் வடிவேலு.இவர் நடிப்பில் சந்திரமுகி 2 படம் இந்த மாதம் திரைக்கு வர உள்ள நிலையில் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி உள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார். 1988ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கிய 1988ஆம் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சத்யராஜ், பிரபு, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு படத்திலும் இவருடைய கதாபாத்திரம் என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. மேலும், இவர் காமெடி நடிகராக மட்டும் இல்லாமல் ஹீரோவாகவும் படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும், இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார் வடிவேலு.

- Advertisement -

வடிவேலு திரைப்பயணம்:

இந்த படத்தின் போது வடிவேலுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவை படங்களில் நடிக்கக் கூடாது என உத்தரவு போட்டது. இதனால் பல வருடங்கள் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தார். கடந்த ஆண்டு தான் இந்த பிரச்சனை தீர்ந்தது. தற்போது வடிவேலு படங்களில் கமிட்டாகி வருகிறார். அவர் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேர்ப்பை பெற்றது.

மாமன்னன் படம்:

படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதிக்க வர்க்கத்தினரும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்று அனைவரையும் முன்னேற பார்க்கும் பட்டியலின மக்களுக்கும், இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன் திரைப்படம். இந்த படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை இயக்குனர் கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

வடிவேலுவின் சம்பளம்:

அவர் நடிப்பில் வெளி வந்த மாமன்னன் திரைப்படம் மக்களிடைய நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் வடிவேலு நடிப்பும் நன்றாக பேச பட்டது. அதன் பின் அவர் தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வந்த நிலையில் அந்த திரைப்படம் இந்த மாதம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தனக்கென மார்க்கெட் மீண்டும் வந்ததாக அவரது சம்பளத்தை உயர்த்தி உள்ளார். அடுத்த படத்தில் 5 கோடி வரை தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார். என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement